சென்னை மத்திய கைலாஷில் ‘எல்' வடிவ மேம்பாலம் மட்டுமல்ல.. ஜிஎஸ்டி ரோடு வரை வரும் புதிய பிரம்மாண்டம்
சென்னை: சென்னை சர்தார் படேல் சாலையையும், ஐடி நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலையையும் இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் எல் வடிவ மேம்பாலம் அமைக்கும் பணி அக்டோபர் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். ₹46 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 640 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தின் பணிகள் கணிசமாக முடிந்துவிட்டன.
தென்சென்னையின் மிக முக்கியமான சந்திப்பு என்றால் ஓஎம்ஆர் சர்தார் வல்லபாய் படேல் சாலை சந்திக்கும் கஸ்தூரி பாய் நகர் ரயில் நிலையம் அமைந்துள்ள மத்திய கைலாஷ் பகுதி தான்.. இங்கிருந்து நேராக சென்றால் பெசன்ட் நகர், மெரினா, அடையாறு, காமராஜர் சாலையை அடையலாம்.. அப்படியே இடதுபுறம் திரும்பினால் இந்திரா நகர், திருவான்மியூர், துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி போகாலாம்.

மத்திய கைலாஷ் சந்திப்பு
அதேபோல் சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் வரை அப்படியே சென்று செங்கல்பட்டும் போக முடியும். அதேபோல் இந்த பக்கம் ஜிஎஸ்டி சாலையை நோக்கி பயணித்தால், கோட்டூர்புரம், அண்ணா பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை, கிண்டி என பயணிக்கலாம். இந்த சாலையில் எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும்.
46 கோடியில் எல் வடிவ மேம்பாலம்
எனவே சென்னை சர்தார் படேல் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சர்தார் படேல் சாலையையும், ராஜீவ்காந்தி சாலையையும் இணைக்கும் வகையில் மத்திய கைலாஷ் சந்திப்பு பகுதியில் 'எல்' வடிவ மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ₹46 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 640 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பணிகள் முடிந்துவிட்டன. நிலம் கையகப்படுத்துதல் பணிகளும் முடிந்துவிட்டன. அந்த பகுதியில் இடையூறாக இருந்த மின்மாற்றிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன. இந்நிலையில் இந்த பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அக்டோபரில் முடியும்
இந்நிலையில் சர்தார் படேல் சாலையையும், ஐடி நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள ஓஎம்ஆர் சாலையையும் இணைக்கும் மத்திய கைலாஷ் சந்திப்பில் எல் வடிவ மேம்பாலம் அமைக்கும் பணி அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எவ வேலு உத்தரவிட்டார்.
ஆறு வழிச்சாலை
மேலும் சர்தார் படேல் சாலையில் காந்தி மண்டபம் முதல் ஜி.எஸ்.டி. சாலை வரை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் போன்ற முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இருக்கிறது. எனவே அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்போதைய 4 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எவ வேலு உத்தரவு பிறப்பித்தார்.
அதிகாரிகள் ஆய்வு
இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு) கு.கோ.சத்தியபிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் இரா.சந்திரசேகர், சென்னை பெருநகர கண்காணிப்புப் பொறியாளர் ச.ஜவஹர் முத்துராஜ், சென்னை கண்காணிப்புப் பொறியாளர் வி.சரவணசெல்வம், கோட்ட பொறியாளர் பி.சந்திரசேகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications