சுதந்திர தின விடுமுறை.. சென்னை - மதுரை செல்ல ரூ.1,549 கட்டணம்.. ஆம்னி பேருந்துகளில் நடக்கும் கொள்ளை!
சென்னை: சுதந்திர தின விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு லட்சக்கணக்கானோர் பயணித்து வரும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.1,600 கட்டணமாகவும், சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.2,000க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி நாளை முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அதேபோல் ஆடி மாதம் என்பதால், தங்களின் சொந்த ஊர்களில் கோயில் திருவிழாக்கள் களைகட்டி வருகின்றன. இதனால் சென்னையில் இருந்து பொதுமக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றன. இதனால் இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதற்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சுமார் 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நேற்று முதலே சிறப்பு பேருந்துகளின் இயக்கம் தொடங்கியுள்ள நிலையில், இதனை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை நடப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல சாதாரணமாக ரூ.560 முதல் ரூ.1,500 வரை கட்டணம் இருக்கும். குளிர்சாதன வசதி இருக்கும் பேருந்துகளில் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் தற்போது சென்னையில் இருந்து மதுரை வருவதற்கு சாதாரண பேருந்துகளிலேயே ரூ.1,200 முதல் 1,500 வரை வசூலிக்கப்படுகின்றன. ஏசி பேருந்துகளில் ரூ.1,600க்கு மேல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
பேருந்து டிக்கெட் புக் செய்யப்படும் செயலிகளில் இந்த கட்டணம் வெளிப்படையாகவே வசூலிக்கப்பட்டு வருவது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணமாக ரூ.1300 முதல் ரூ.2000 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் எப்படியாவது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால், வேறு வழியின்றி ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை பொருட்படுத்தாமல் பயணித்து வருகின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டும் ஆம்னி பேருந்துகளில் அனைத்து சீட்களும் புக்காகி இருக்கின்றன. ஒவ்வொரு முறை பண்டிகை விடுமுறையின் போதும், ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை தொடர்ந்து வருகிறது. இதுகுறித்த புகார்கள் எழுந்தாலும், தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க தவறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications