கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் ரூ.60.. தீபாவளிக்கு விலை குறையுமா? சென்னைக்கு குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையலில் தினமும் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது..,. கோயம்பேடு மார்க்கெட்டிலேயே கிலோ ரூ.60-ஐத் தொட்டுள்ளதால், வெளிச்சந்தையில் வாங்கும்போது இன்னும் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியானால் தீபாவளி நெருங்கும் நேரத்தில் வெங்காய விலை எப்படி இருக்கும் தெரியுமா?

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் முதல் ரக நாசிக் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த வெங்காயம், ஆகஸ்ட் 23-ம் தேதி ரூ.50 ஆக உயர்ந்தது. தொடர்ந்து செப்டம்பர் 22-ம் தேதி கிலோ ரூ.60-ஐத் தொட்டது.

இதையடுத்து வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் விலை படிப்படியாகக் குறைந்து, அக்டோபர் 20-ம் தேதி ஒரு கிலோ முதல் ரக நாசிக் வெங்காயம் ரூ.46-க்கு விற்பனையானது. ஆனால், கடந்த சில நாட்களாக மறுபடியும் விலை எகிற ஆரம்பித்து விட்டது.. அக்டோபர் 24-ம் தேதி கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையானது.

onion

கோயம்பேடு மார்க்கெட்

அதேசமயம், கோயம்பேடு மார்க்கெட்டில் மற்ற ரக வெங்காயங்களின் விலையும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ஆந்திராவில் இருந்து வரும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.36-க்கும், பெரிய வெங்காயம் ரூ.42-க்கும் விற்பனையாகிறது. கர்நாடகாவிலிருந்து வரும் சின்ன வெங்காயம் ரூ.38-க்கும், பெரிய வெங்காயம் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாசிக் சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது.

மொத்த விற்பனை சந்தையிலேயே விலை உயர்ந்துள்ள நிலையில், சென்னை வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அன்றாட சமையலுக்காக வெங்காயம் வாங்கும் பொதுமக்களும் இல்லத்தரசிகளும் கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

ரேஷன் கடை - வெங்காயம்

வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவற்றின் மூலம் நாசிக்கிலிருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் 3-ம் தேதி முதல் நகர்ப்புற ரேஷன் கடைகளில் ஒரு ரேஷன் அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் வெளி மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை மீண்டும் ரூ.60 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளது.

வரத்து குறைவு

வெங்காய விலை மீண்டும் உயர்ந்ததற்கான காரணம் என்ன? கோயம்பேடு வெங்காய மொத்த வியாபாரி ரகுநாத் இதுகுறித்து சொல்லும்போது, வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகைக் காலத்தில் விவசாயிகள் போதிய அளவு வெங்காயத்தை சந்தைக்கு கொண்டு வரவில்லை.. இதனால் வடமாநிலங்களிலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்துள்ளது. சந்தைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது.

தீபாவளிக்கு முன்பாக வடமாநில வியாபாரிகள், தங்களிடமுள்ள வெங்காய ஸ்டாக்கை, மொத்தமாக சந்தைக்கு அனுப்பி வைக்க வாய்ப்புள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து அதிகரித்து, அக்டோபர் 26 அல்லது 27-ம் தேதி முதல் விலை ஓரளவுக்கு குறையலாம்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் வியாபாரி ரகுநாத்.

விலை எப்போது குறையும்

ஆனால், இதனால் விலை தொடர்ந்து குறையும் என்று சொல்ல முடியாது... வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளதால், பண்டிகைக்கான தேவையும் அதிகரிக்கும்.. இதனால் நவம்பர் முதல் வாரத்தில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளதாகவே என்கிறார்கள் பெரும்பாலான வியாபாரிகள். .

அதுமட்டுமல்ல, தீபாவளிக்கு பிறகு புதிய வெங்காயம் அறுவடைக்கு வரத் தொடங்கும்.. புதிய வெங்காயம் சந்தைக்கு வரும்போது, மொத்த வரத்தும் அதிகரித்து, வெங்காயத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது என்றும் கணித்து கூறுகிறார்கள்.

அதனால் தீபாவளிக்கு முன்பு விலை ஓரளவு குறையுமா, நவம்பர் முதல் வாரத்தில் மீண்டும் உயருமா என்பதுதான் இப்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+