சோழிங்கநல்லூர் டூ மகாபலிபுரம்.. மொத்தமாக அடியோடு மாறுது! தமிழ்நாடு அரசின் நல்ல முடிவு! இதுதான் தேவை
சென்னை: சென்னையில் அமைக்கப்பட்டு வரும் வெளிவட்ட சாலை மீஞ்சூரில் வரவிருக்கும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஏற்றபடி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை சோழிங்கநல்லூருக்கு இணையாக அல்லது அதைவிட பெரிதாக மகாபலிபுரத்தை மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் பல்வேறு சாலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை 15.7 கோடி ரூபாயை செலவு செய்ய உள்ளது. இதன் மூலம் கிண்டியில் இருந்து தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில்தான் ஜிஎஸ்டி சாலையில் சந்தை ரோடு மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்பில் ரூ. 82 கோடி செலவில் அரசு மேம்பாலம் கட்டியது. இந்த பாலம் 12 மீட்டர் அகலம் கொண்டது, 1.5 கிமீ நீளம் கொண்டது என்றாலும் கூட, இது ஒரு வழி சாலையாக உள்ளது. அதாவது தாம்பரம் டூ கிண்டி செல்லும் ஒரு வழி சாலையாக உள்ளது. இதையும் விரிவுபடுத்த உள்ளனர்.
ஓஆர்ஆர் சாலை: அந்த வகையில் சென்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
அரசு ஆதாரங்களின்படி, ஓஆர்ஆர் எனபப்டும் வெளிவட்டச் சாலையானது நிலையான வேகமான உயர் வளர்ச்சி பாதையாக அரசாங்கத்தால் பார்க்கப்படுகிறதாம். அதனால் இங்கே வேகமாக முன்னேற்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உயர்ந்த கட்டிடங்கள் மூலம் இந்த பகுதிகள் வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
அதேபோல் இவர்கள் குழு இந்த பகுதியில் மெட்ரோ, ரயில், புறநகர் ரயில் அல்லது டிராம் அல்லது வெளிவட்டச் சாலையில் மற்ற விதமான போக்குவரத்து முறைகளின் செயல்பாட்டு சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்ய உள்ளனர். இங்கே மெட்ரோ அமைத்தால் எப்படி இருக்கும் என்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
ஓஎம்ஆர் சாலைக்கு மாற்று: இந்த நிலையில்தான் சோழிங்கநல்லூருக்கு இணையாக அல்லது அதைவிட பெரிதாக மகாபலிபுரத்தை மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக ஓஎம்ஆர் சாலைக்கு மாற்றாக புதிதாக Chennai Peripheral Ring Road, அதாவது சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு கொண்டு வர உள்ளனர். சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு, ₹12,301 கோடி மதிப்பீட்டில் 133.38 கிலோமீட்டர் நீளத்தில் அமைய உள்ளது. இந்த சாலை மகாபலிபுரத்திற்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக உள்ளது. சென்னை எண்ணூர் துறைமுகத்தில் தொடங்கும் இந்த திட்டம், சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவயல், காட்டுப்பள்ளி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, இறுதியில் மகாபலிபுரத்தில் முடிவடைகிறது.
பரவலாகப் பயன்படுத்தப்படும் பரபரப்பான பழைய மகாபலிபுரம் சாலை அதாவது ஓஎம்ஆர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஈசிஆர் வழித்தடத்திற்கு மாற்றாக, போக்குவரத்து நெரிசல் இல்லாத புதிய பாதையுடன் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மகாபலிபுரத்தை ஒரு பெரிய சரக்கு போக்குவரத்து துறைமுறைக மையமாக மீண்டும் மாற்றும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சரக்கு கன்டெய்னர் லாரிகள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், சென்னை-எண்ணூர் துறைமுகத்திற்கு சரக்குகளை எடுத்துச் செல்லவும் சிபிஆர்ஆர் மிகவும் உகந்த பாதையாக இருக்கும்.
துணை நகரம்: இதேபோல் மாமல்லபுரத்தில் துணை கோள் நகரம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் உள்ளது. நிறைய கடல் வளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக உள்ளது. இங்கே துணைக்கோள் நகரம் வரும் பட்சத்தில் இந்த மாமல்லபுரம் மின்சார ரயிலுடன் இணைக்கப்படும். மெட்ரோவும் கூட இங்கே எதிர்காலத்தில் வர உள்ளது.
மெட்ரோ பணிகள் இந்த 20 ஆண்டுகளில் இங்கும் முடிக்கப்படும். தற்போது இங்கே நியூ டவுன் அமைப்பதற்கான கன்சல்டன்சி பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட உள்ளது . விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாமல்லபுரம் இதன் மூலம் உயர்த்தப்படும். அண்ணா சாலை போல பெரிய சாலைகள், உயர் கட்டிடங்கள், சுற்றுலா அமைப்புகள் இங்கே உருவாக்கப்படும்.
அதேபோல் புதிய நிறுவனங்கள், முதலீடுகள் இங்கே ஈர்க்கப்படும். மேலும் சாலைக்கு கீழே மின்சாரம், ஸ்மார்ட் சிட்டி அமைப்புகள், நவீன கட்டிடங்கள், புதிய பாலங்கள் அமைக்கப்படும். முக்கியமாக இங்கே இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை வளத்தை பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது












Click it and Unblock the Notifications