சென்னை பல்லாவரம் துரைப்பாக்கம் சாலையிலா இப்படி? தண்ணீர் லாரிகள் குறித்து திடுக்கிடும் வீடியோ
சென்னை: சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையான 200 அடி ரேடியல் சாலையில் தண்ணீர் லாரிகளால் சாலைகள் மிக மோசமான நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நன்மங்கலம் ஏரியில் சட்டவிரோதமாக போர் போட்டு தண்ணீர் லாரிகள் தண்ணீர் பிடிப்பதாக நெட்டிசன் ஒருவர் ட்விட்டரில் குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையின் முக்கியமான சாலைகளில் பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை மிகவும் முக்கியமானது. இந்த சாலை தான் விமான நிலையம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகள் ஓம்ஆர், கிழக்கு கடற்கரை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், கந்தன்சாவடி, திருவான்மியூர், பெருங்குடி, ஆகிய சென்னையின் ஐடி காரிடர் பகுதிகளை இணைக்கிறது. சென்னையில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் ஓஎம்ஆர் மற்றும் ரேடியல் சாலைகளில் தான் இருக்கின்றன.

பல லட்சம் மக்களுக்கு வேலை பார்க்கும் இடத்தை இணைப்பதற்காக மாநில அரசால் உருவாக்கப்பட்ட விரைவு சாலை தான் ரேடியல் சாலை. ஒரு காலத்தில் ஓம்ஆர் சாலையில் இருந்து ரேடியல் சாலை வழியாக குரோம்பேட்டை செல்ல 10 நிமிடம் கூட ஆகாது. ஆனால் இப்போது அப்படி இல்லை. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னையில் பல்லாயிரம் பேர் பயன்படுத்தும் சாலைகளில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது ரேடியல் சாலை இருக்கிறது. ஆனால் தண்ணீர் லாரிகளால் சாலைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றன.
இப்போது உள்ள சூழல்களை பார்த்தால், அடுத்த ஓம்ஆர் ஆக பல்லாவரம் துரைப்பாக்கம் சாலை உருவெடுக்கும் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு ஐடி நிறுவனங்கள் வேகமாக ரேடியல் சாலைகளுக்கு வந்துள்ளன. விமான நிலையம் கூப்பிடும் தூரம், எட்டி பார்க்கும் தூரத்தில் வேளச்சேரி, சில நிமிடங்களில் தாம்பரம் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை என அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால் மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு செல்லும் ரேடியல் சாலை மிக மோசமாகிவிட்டது என்பது பொதுமக்களின் பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.

இது தொடர்பாக டேவிட் மனோகர் என்பவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையின் ஒரு பகுதியை தண்ணீர் டேங்கர் மாஃபியா கைப்பற்றி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு 6-7 லாரிகள் தான் இருந்தன, இப்போது 50-60 ஆக உள்ளது. சாலை ஆக்கிரிமித்து நிற்கின்றன. இந்த டேங்கர்கள் சட்டவிரோத தண்ணீரை உறிஞ்சுகின்றன.
Water Tanker Mafia, takes over a part of Pallavaram - Thoraipakkam Radial Road. few mths back it was 6-7 lorries, now it's 50-60. Request immediate action to stop this illegal tapping of water,and free radial road of these tankers. @CMOTamilnadu @SDMeena_IAS @rnadh @RAlagumeena pic.twitter.com/dbLRUWZlkU
— David Manohar (@DavidManohar7) August 20, 2023
ரேடியல் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் . 2-3 கி.மீ தொலைவில் உள்ள நன்மங்கலம் ஏரியில் உள்ள தனியார் ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, ரேடியல் ரோட்டில் வைத்து நிரப்புகிறார்கள், சுமார் ஒரு கி.மீ தூரம் ரோடுகளை சேதப்படுத்தி, 2 வழிச்சாலையையும் ஆக்கிரமித்து, போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதுடன் விபத்துகளும் ஏற்படுகின்றன என்று கூறியுள்ளார்.
-
குன்னம், பல்லாவரம் தொகுதிகளில் வேட்பாளர்கள் யார்! அறிவித்தார் பாரிவேந்தர் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications