உனக்கு 16, எனக்கு 47.. கராத்தே கிளாஸில் "நெருக்கம்".. +2 மாணவியுடன் டீச்சர் ஓட்டம்..காரணத்தை பாருங்க
சென்னை: பள்ளிக்கு காலையில் சென்ற மகளை காணாமல் பெற்றோர் பரிதவித்து விட்டார்கள்.. இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டபோதுதான், அந்த பகீர் தகவல் வெளியானது. யாரந்த கராத்தே மாஸ்டர்? என்ன நடந்தது சென்னையில்?
சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 47 வயதாகிறது.. திருமணமாகிவிட்டது.. இவரது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.. இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த பெண், பெரம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கராத்தே பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார்.. எனவே, தினமும் ஸ்கூல் முடிந்ததுமே, கராத்தே கிளாஸுக்கு சென்றுவிடுவார். கராத்தே பயிற்சியாளராக பணிபுரியும் 27 வயது பெண் ஒருவர், இந்த மாணவிக்கு தினமும் பயிற்சி தந்து வருகிறார்..
சைக்கிள்: வழக்கமாக இந்த மாணவி சைக்கிளில்தான் ஸ்கூலுக்கு செல்வாராம்.. அப்படித்தான், கடந்த 17ம் தேதி காலை சைக்கிளில் ஸ்கூலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்.. ஆனால், மாணவி இன்னும் ஸ்கூலுக்கு வரவில்லை? ஏன் வரவில்லை? என்று கேட்டு பள்ளியிலிருந்து பெற்றோருக்கு மெசேஜ் வந்துள்ளது.
இந்த மெசேஜை பார்த்து பதறிப்போன பெற்றோர், நேரடியாகவே ஸ்கூலுக்கு கிளம்பி சென்றார்கள்.. அங்கு தங்கள் மகளுடன் படிக்கும் சக தோழிகளிடமும் இதுகுறித்து விசாரித்தார்கள்.. ஆனால், மகளை பற்றி எந்த தகவலுமே கிடைக்காத நிலையில், பயந்துபோன பெற்றோர், உடனடியாக திருவிக நகர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் தந்தார்கள்.
மாணவி மாயம்: இதையடுத்து திருவிக நகர் போலீசாரும், இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து மாணவியை தேட துவங்கினார்கள்.. பிறகு மாணவியின் செல்போன் டவரையும் ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் மாணவி தூத்துக்குடியில் இருப்பது தெரிய வந்தது..
இதையடுத்து தூத்துக்குடிக்கே கிளம்பி சென்ற போலீசார், செல்போன் டவர் உதவியுடன் மாணவியையும் கண்டுபிடித்துவிட்டனர்.. ஆனால், அவருடன் 27 வயதுடைய கராத்தே பெண் பயிற்சியாளர் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. பிறகு இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
காதல் விவகாரம்: அப்போதுதான் இவர்களது காதல் விவகாரம் அம்பலமானது.. அதாவது கராத்தே பெண் பயிற்சியாளர் இன்னும் சிறிது காலத்தில் ஆணாக மாற போகிறாராம்.. கராத்தே கிளாஸில் மாணவியை பார்த்ததுமே டீச்சருக்கு காதல் வந்துவிட்டதாம்.. அப்போது முதலே மாணவியை காதலித்து வருவதாகவும், திருமணம் செய்து கொள்ளவிரும்பி, தற்போது தன்னுடன் அழைத்து சென்றதாகவும் போலீசில் வாக்குமூலம் தந்தார்.
உடனே போலீசார் இதுகுறித்து மாணவியிடம் கேட்டிருக்கிறார்கள்.. அதற்கு அவரும், கராத்தே பெண் பயிற்சியாளரையே கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார்..
விசாரணை தீவிரம்: இதைக்கேட்டு அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த போலீசார், உடனடியாக மாணவியின் பெற்றோரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து இது சம்பந்தமாக பேசினார்கள்.. மாணவிக்கு கவுன்சிலிங் தரப்பட்டு, பெற்றோருடன் அவரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.. பிறகு மாணவி காணாமல் போனதாக தரப்பட்ட பதிவு செய்யப்பட்ட வழக்கை, செம்பியம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கராத்தே "பெண் காதலரிடம்" விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications