இன்ஞ்ச் கூட நகரல.. மொத்தமா "ஜாம்" ஆன சென்னை ரோடு..நள்ளிரவிலும் பரபரபத்த பெருங்களத்தூர், ஜிஎஸ்டி சாலை
சென்னை: இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியூர்களுக்கு கிளம்பி சென்றதால், நள்ளிரவையும் தாண்டி கடும் போக்குவரது நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினங்களாக இருப்பதால், லட்சக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்ல கடந்த 4 நாட்களாகவே தயாராகி வந்தனர்.. அந்தவகையில், சென்னையிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள், சொந்த ஊருக்கு கிளம்பினார்கள்..
சிறப்பு பேருந்துகள்: கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும் 2,000 சிறப்புப் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 4,167 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. இதைத்தவிர, தங்கள் சொந்த வாகனங்களிலும் பயணித்தர்.. கார், வேன் உள்ளிட்டவைகளையும் புக் செய்து, பயணமானார்கள். இதனால், அனைத்து வாகனங்களும் சேர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒரே நேரத்தில் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்துவிட்டன.

பூந்தமல்லி பகுதியிலும், போக்குவரத்து வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.. சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும், பூவிருந்தவல்லி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, நேற்று மாலையிலிருந்தே சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்துவிட்டது..
தாம்பரம் ஜிஎஸ்டி: பயணிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.. குறிப்பாக, தாம்பரம் ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. அதேபோல,
ஒருவேளை பயணிகள் சொந்த வாகனங்களில் சென்னையிலிருந்து செல்ல நேர்ந்தால், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை தவிர்த்துவிட்டு மற்ற வழித்தடங்களை பயன்படுத்தி செங்கல்பட்டு சென்று விடலாம் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
தாம்பரம் பைபாஸ் : ஜிஎஸ்டி சாலையை தவிர்த்து, மீஞ்சூர் - வண்டலூர் பைபாஸ் சாலையிலும் நெரிசல் இல்லாமல் செய்யலாம்.. அதேபோல் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையிலும் சென்று பெருங்களத்தூரை அடையலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "சுங்கச்சாவடிகளில் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கவுண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அதிக ஸ்கேனர்களைப் பயன்படுத்துதல் மற்றும் அதிக வாகனங்கள் செல்லும் திசையில் அதிக ஊழியர்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
கட்டணம் ரத்து: ஆயுத பூஜையை போலவே, தீபாவளி பண்டிகையின் போதும், கட்டுப்பாடற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில், கட்டணத்தை விலக்கி, வாகனங்களை இலவசமாக அனுமதிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று மாலை முதலே தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
விடிய விடிய பஸ்களின் நெரிசல் காணப்பட்ட நிலையில், இன்று காலையிலிருந்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பகுதியில் நெரிசல் குறைந்துள்ளது.. மக்கள் கூட்டம் கொஞ்சமும் இல்லாமல், இயல்பாகவும், அமைதியாகவும் காணப்பட்டு வருகிறது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை தினத்தன்றுகூட, தாம்பரம்,பெருங்களத்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். ஆனால், நேற்று இரவு கடும்கூட்டத்தால், திக்குமுக்காடிய கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, தற்போது நெரிசலின்றி காணப்படுகிறது.
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications