பெருங்களத்தூரில் 6வது மாடிக்கு அவசரமாக ஓடிய ஐ.டி கம்பெனி நபர்.. இந்த பெண்ணுக்காகத்தானா? கடவுளே
சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்கொலைகளும், கொலைகளும் அதிகமாகி கொண்டே வருகின்றன.. குறிப்பாக இளம் தலைமுறையினரின் தற்கொலைகள் அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.. இதற்கு பெரும்பாலும் புரிதல் குறைபாடுகளே காரணம் என்றும் மனநல மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.. இதோ நேற்றுகூட ஒரு தற்கொலை தலைநகரம் சென்னையில் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் முழு வீச்சில் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ்.. 26 வயதாகிறது..
இவர் பெருங்குளத்தூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்.

அவசர அவசரமாக ஓடினார்
இந்தநிலையில் இன்று வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார் பிரகாஷ்.. அப்போது டியூட்டியில் இருந்தபோது அவருக்கு ஒரு போன் வந்துள்ளது.. அந்த அழைப்பை பேசி முடித்ததுமே பதற்றமானார் சூரிய பிரகாஷ்.. அவசர அவசரமாக அலுவலகத்தில் உள்ள 6வது முடிக்கு ஓடினார்.. அங்கிருந்து ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து சக ஊழியர்கள், அலறிடியத்துக் கொண்டு ஓடினார்கள்.. உடனடியாக இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரனை போலீசுக்கு தகவல் தந்தார்கள்..
போலீசாரும் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்தார்கள்.. ரத்த வெள்ளத்தில் விழுந்த கிடந்த சூரிய பிரகாஷின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அத்துடன், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
சூரிய பிரகாஷ் காதல்
இதில் முதல்கட்டமாக சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது.. அதவாது, கடந்த 4 வருடங்களாக ஒரு பெண்ணை,சூரிய பிரகாஷ் உயிருக்கு உயிராக காதலித்து வந்தாராம்.. அந்த பெண் திடீரென பிரகாஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.. அத்துடன், சூரிய பிரகாஷின் காதலையும் ஏற்க மறுத்துள்ளார்..
இந்த அதிர்ச்சியை தாங்கி கொள்ள முடியாத சூரிய பிரகாஷ், 6வது மாடிக்கு ஓடிச்சென்ற, மாடியில் இருந்து கீழே குறித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
பெருங்களத்தூர் ஐடி நிறுவனம்
பெருங்களத்தூர் பகுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர், டியூட்டியிலிருந்தபோதே, 6வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
திருவொற்றியூரை சேர்ந்தவராம் சூரிய பிரகாஷ்.. தனியார் ஐடி நிறுவனத்தில் 4 வருடங்களாக பணியாற்றி வந்திருக்கிறார்.. சம்பந்தப்பட்ட பெண்ணையும் 4 வருடங்களாகவே காதலித்து வந்துள்ளார்.. அந்த பெண் எதற்காக பேசுவதை நிறுத்தினார்? கடைசியாக யாரிடம் போனில் பேசினார்? என்றெல்லாம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
பெருகும் தற்கொலைகள்
சமீபகாலமாகவே, இளைஞர்களின் தற்கொலை மட்டுமல்ல, கொலைகளும் அதிகமாகி வருகிறது.. அதிலும் உயிருக்கு உயிராக காதலித்த பெண்களாலேயே இவர்கள் கொல்லப்படுவது அதைவிட கொடுமையானது..
கேரளா ஷாரோன் கொலை முதல் மேகாலயா ஹனிமூன் கணவர் கொலை வரை, இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.. இந்த பெருங்களத்தூர் மரணத்தை பொறுத்தவரை, 4 வருடம் சூரிய பிரகாஷை, அந்த பெண் காதலலித்ததாக சொல்கிறார்கள்.. ஒருவேளை அது உண்மையானால், அப்பாவி உயிரை பறித்த அந்த பெண்ணும் குற்றவாளிதானே??
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications