சென்னையில் விறுவிறுன்னு பரவும் பாதிப்பு.. தமிழக மக்கள் 2 மாதம் ஜாக்ரதையா இருக்கணும்.. புது வார்னிங்
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் கவலை தெரிவித்திருந்த நிலையில், . இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், காய்ச்சல் பாதிப்புகளும் அதிக அளவில் பரவியன.. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையும், சாதாரண நாட்களை விட பலமடங்கு உயர்ந்து காணப்பட்டது..
பெருங்களத்தூர்: குறிப்பாக, சென்னையின் புறநகர் பகுதிகளில் பெருங்களத்தூர், தாம்பரம், வண்டலூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

எனவே, சுகாதாரத்துறை சார்பில் உடனடியாக மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றும், குறிப்பாக, தாம்பரம் மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும், குடிசை பகுதிகள் உள்ள இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்களை நடத்தி, காய்ச்சலை ககட்டுப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கையும் விடுத்தனர்.
சுகாதாரத்துறை: இதற்கு பிறகு, நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியதுடன், சுகாதார அதிகாரிகள் நேரடியாகவே களமிறங்கி, மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாமல் ஏற்படாதவாறு, தடுத்து நிறுத்திவிட்டனர்.
கடந்த மாதம் முதல், பருவமழை தொடங்கி உள்ளதால், காய்ச்சல், சளி பாதிப்புகள் அதிகமாக உருவெடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும், சால்மோனெல்லா டைஃபி எனப்படும் பாக்டீரியா கிருமி பரவுவதாகவும், இதனால், டைஃபாய்டு காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும் கடந்த வாரம்கூட செய்திகள் வெளியாகியிருந்தன.. டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் சென்னையில் அதிகரித்து வருவதாக டாக்டர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
அட்வைஸ்: உடல் சோா்வு, கடுமையான காய்ச்சல், பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், தொண்டை வலி, உடலில் தடிப்புகள், வயிற்று உபாதைகள் போன்றவை டைபாய்டின் அறிகுறிகளாகும்.
இப்போது, டைபாயிடு மட்டுமல்லாமல், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்புகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன.. இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏடிஸ் கொசுக்களின்உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக சொல்கிறார்கள்.
அறிவுறுத்தல்: இப்படிப்பட்ட சூழலில், பொது சுகாதாரதுறை இயக்குநர் செல்வ விநாயகம் பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.
அவர் சொல்லும்போது, "கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடிக்கும்போது மஞ்சள் காமாலை, டைபாய்டு, எலி காய்ச்சல், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட100-க்கும் மேற்பட்ட வைரஸ் மற்றும்பாக்டீரியா பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதைத் தடுக்க தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பதுதான் சிறந்த தீர்வாகும்.
அட்வைஸ்: பொது விநியோகத்தில் வழங்கப்படும் குடிநீரில், குளோரின் கலந்து விநியோகிக்கப்படுகிறது. ஆனால், குளோரின், பாக்டீரியா தொற்றை மட்டும் அழிக்குமே தவிர, வைரஸ் பாதிப்பை தடுக்காது. அதனால், குளோரின் கலந்திருந்தாலும், குடிநீரை காய்ச்சி குடிக்கும்போது, பல்வேறு விதமான நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்' என்று அறிவுறுத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications