நீலாங்கரையில் திடீர்னு அந்த "உருவம்" யாருங்க? சோழிங்கநல்லூர் டூ பெருங்குடி.. அள்ளு கிளப்புது சென்னை
சென்னை : சென்னையில் அந்த நபர் யாரென்று தெரியவில்லை.. புறநகர் மக்கள் கதறுகிறார்கள்.. இது சம்பந்தமான கோரிக்கையையும் போலீசுக்கு விடுத்துள்ளார்கள்.
சென்னையை சுற்றிலும், குறிப்பாக, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும், OMR சாலையில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன.. இதைத்தவிர, ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

சென்னையின் புறநகர் பகுதி என்பதால், இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் பகுதிகளிலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்கள்...
ஹாஸ்டல்: பல பெண் ஊழியர்கள், இதற்கென உள்ள ஹாஸ்டல்களில் தங்கி வருகிறார்கள்... இவர்களுக்கு பணியில் ஷிப்ட்களும் உண்டு என்பதால், தங்களது அலுவலகங்களுக்கு, நடந்தே சென்று வருவது இவர்களின் வழக்கம். ஒருசிலர் தூரத்தில் வசிப்பவர்கள், தங்கள் ஆபீஸிலிருந்து, பஸ் ஸ்டாப்புக்கு நடந்து வந்து, பஸ் ஏறி செல்வார்கள்.
ஆனால், கடந்த சில நாட்களாகவே, இந்த பகுதியில் நடந்து செல்ல பெண்கள் அச்சப்படுகிறார்களாம். காரணம், டியூட்டி முடித்துவிட்டு, பஸ் ஏற நடந்து சென்று கொண்டிருந்தால், திடீரென ஒரு நபர், அந்த வழியாக செல்லும் பெண்களை, கட்டையால் அடித்துவிட்டு ஓடிவிடுகிறாராம். சமீபகாலமாகவே இந்த சம்பவம் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.
பஸ் ஸ்டாப்: அவர் யார் என்று தெரியவில்லை.. 50 வயது இருக்குமாம்.. பஸ் ஸ்டாப்புக்கு யார் நடந்து சென்றாலும், உடனே அவர்களை கட்டையால் தாக்கிவிடுகிறாராம்.. 4 நாட்களுக்கு முன்புகூட, துரைப்பாக்கம் 200 அடி சாலையில் கையில் கட்டையுடன் இந்த ஆசாமி நின்று கொண்டிருந்தாராம்.. அப்போது, சுவேதா என்ற 25 வயது பெண், தன்னுடைய தோழிகளுடன் பஸ் ஏற நடந்து சென்று கொண்டிருந்தார்.
திடீரென அந்த மர்மநபர், ஸ்வேதாவின் மண்டையிலேயே ஒரே போடாக போட்டார். இதில், மண்டை உடைந்து ஸ்வேதாவுக்கு ரத்தம் கொட்டியது.. இதைப்பார்த்து பதறிப்போய் அவருடன் வந்த மற்ற தோழிகளும், அங்கிருந்து தப்பி ஓடினார்கள். பிறகு நேராக போலீசுக்கு சென்ற தோழிகள், இது தொடர்பாக புகார் தந்தார்கள். போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர்..
உருட்டுக்கட்டை: அப்போது அந்த ஆசாமி அங்கேயே நின்று கொண்டிருந்தார்.. போலீசாரை பார்த்த பிறகும்கூட, அவர் அங்கிருந்து நகரவில்லை.. அவரிடம் சென்ற போலீசார், அந்த உருட்டுக்கட்டையை பறித்துக்கொண்டு அவரை அங்கிருந்து விரட்டி விட்டனர்.
நேற்று முன்தினம் இரவு, செம்மஞ்சேரியை சேர்ந்த குமரன் என்பவர் துரைப்பாக்கத்தில் இருந்து நீலாங்கரைக்கு செல்லும் சாலையில் நடந்த சென்றுகொண்டிருந்தார்... அப்போது அதே நபர், உருட்டுக்கட்டையால் குமரனை ஒரே போடு போட்டார்.. எனினும், குமரன் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிவிட்டார். அங்கிருந்த பொதுமக்கள், மீண்டும் துரைப்பாக்கம் போலீசுக்கு தகவல் தந்தனர்.. போலீசார் வருவதற்குள் அந்த ஆசாமி கிளம்பிவிட்டார்.
கோரிக்கை: நாளுக்கு நாள் இப்படி பகீர் சம்பவங்கள் நடப்பதால், வெளியில் நடக்கவே பயமாக இருப்பதாகவும், அந்த மர்மநபரை உடனடியாக பிடித்து, மனநல காப்பகத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முக்கியமாக, இந்த பகுதிகளில் எல்லாம் ரோந்து போலீஸை பலப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications