3 மாதங்களை கடந்தும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.. 103-வது நாளாக ஒரே விலையில் விற்பனை!
சென்னை: சென்னையில் 103-வது நாளாக இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 க்கும் என விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. இதற்கு நாட்டில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு உள்ளது. இதன் உச்சமாக கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ100ஐ தாண்டி விற்பனையானது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ110க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதன் பின்னர் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ஒரு பகுதியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2 முறை குறைத்தது. தமிழக அரசும் பெட்ரோல் விலையை ரூ3 குறைத்தது.
பின்னர் கடந்த மே மாதம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ9; டீசல் விலையில் ரூ7.50 என குறைத்தது மத்திய பாஜக அரசு. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் குறைத்தன. இதனால் பெட்ரோல், டீசல் விலை சற்றே குறைந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவில்லை. இது பெரிய சர்ச்சையாகவும் வெடித்தது.
நாடாளுமன்றத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கடுமையாக விவாதம் நடந்தது. தமிழக எம்.பி.க்களும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே இது தொடர்பாக தமிழில் காரசார விவாதம் நடைபெற்றது. இதேபோல் தமிழக அரசு மீது பாஜக இது தொடர்பாக புகார் தெரிவிக்கிறது. இதற்கு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பதிலடியும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் 103-வது நாளாக இன்றும் 1 லிட்டர் பெட்ரோல் ரூ102.63, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications