களைகட்டனும் நாளை 100-வது நாள் கொண்டாட்டம்- சென்னையில் இன்றும் 1 லி.பெட்ரோல் ரூ102.63க்கு விற்பனை!
சென்னை: தமிழகத்தில் 99-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமுமே இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 க்கும் என விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கின்றன. இதற்கு நாட்டில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு உள்ளது. இதன் உச்சமாக கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை ரூ100ஐ தாண்டி விற்பனையானது. 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ110க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்களும் நடத்தப்பட்டன.

இதன் பின்னர் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் ஒரு பகுதியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2 முறை குறைத்தது. தமிழக அரசும் பெட்ரோல் விலையை ரூ3 குறைத்தது.
பின்னர் கடந்த மே மாதம் உயர்த்தப்பட்ட பெட்ரோல் மீதான கலால் வரியில் ரூ9; டீசல் விலையில் ரூ7.50 என குறைத்தது மத்திய பாஜக அரசு. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசுகளும் குறைத்தன. இதனால் பெட்ரோல், டீசல் விலை சற்றே குறைந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்கவில்லை. இது பெரிய சர்ச்சையாகவும் வெடித்தது.
நாடாளுமன்றத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கடுமையாக விவாதம் நடந்தது. தமிழக எம்.பி.க்களும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே இது தொடர்பாக தமிழில் காரசார விவாதம் நடைபெற்றது. இதேபோல் தமிழக அரசு மீது பாஜக இது தொடர்பாக புகார் தெரிவிக்கிறது. இதற்கு தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பதிலடியும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் இன்று 99-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ102 .63, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24ஆக விற்பனையாகிறது. ஆனாலும் எப்போது பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications