பரங்கிமலை பறக்கும் ரயில்.. உடைந்தது பாலம் மட்டுமல்ல.. சென்னை மக்களின் நம்பிக்கையும் கூட!
சென்னை: சென்னையில் வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை கட்டுமானப் பணியின் போது பாலம் திடீரென இடிந்து விழுந்திருக்கிறது. வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் பல்வேறு பிரச்சனைகள் வந்துள்ளன. என்று தான் இந்த ரயில் ஓடப்போகிறது என்று சென்னை மக்கள் ஏக்கத்துடன் பார்க்கும் நிலை இருக்கிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போக்குவரத்து சேவையை அதிகரிக்கும் வகையிலும் பறக்கும் ரயில் திட்டம் 1980களில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின்படி, சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை 1995ம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது. அதன்பிறகு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 1997ல் மயிலாப்பூர் வரை பறக்கும் ரயில் சேவை வந்துவிட்டது. அதன்பிறகு அடுத்த 10 வருடத்தில் மயிலாப்பூர் வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் பாதை வந்துவிட்டது. இப்போது தென் சென்னை இந்த அளவிற்கு வளர்ந்திருக்க காரணம் பறக்கும் ரயில் பாதை தான் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

இதனிடையே 3ம் கட்டமாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது தெற்கு ரயில்வே. இந்த நிலையில், 90 சதவீத பணிகள் வேகமாக முடிந்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் பிரச்சினையால் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் மற்றும் பரங்கிமலை இடையே வெறும் அரை கிலோ மீட்டருக்கு சிக்கல் எழுந்தது. பல ஆண்டுகளாக பாதை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இப்பிரச்சினைக்கு கடந்த ஆண்டுதான் தீர்வு காணப்பட்டது. உச்ச நீதிமன்றம் வரை பிரச்சனை போன பின்னரே தீர்வு வந்தது. ஒரு வழியாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பாலத்தை தாங்கும் தூண்கள் அமைத்து, அதன் மீது தாங்கு பாலம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
தற்போது, பரங்கிமலை ரயில் நிலையத்தை ஒட்டிய 500 மீட்டர் பாதையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி ஆதம்பாக்கம் அருகே தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை அருகே 2 தூண்களுக்கு இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் அடுத்த கட்டப்பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் 2 தூண்களுக்கு இடையே சுமார் 60 அடி நீளம் கொண்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்று மாலை 6.10 மணியளவில் திடீரென இடிந்து கீழே விழுந்தது. பாலம் விழும் சத்தத்தை கேட்டு அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் ஓடிவந்து அங்கு யாரேனும் சிக்கியுள்ளார்களா என பார்த்தனர்.
வழக்கமாக இந்த பாலத்தின் கீழ் பொதுமக்கள் மாலை நேரத்தில் வருவார்கள். ஆனால், நேற்று அதிஷ்டவசமாக யாரும் அப்பகுதியில் இல்லை. இதனால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இதையடுத்து விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஆதம்பாக்கம் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். வேளச்சேரி - பரங்கிமலை வரை மேம்பாலம் அமைக்கும் திட்டத்தில் 500 மீட்டர் பாலப்பணி இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் பாலம் இடிந்து விழுந்த சம்பவம், எப்போது பணிகள் முடியும் என்ற கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பில், "வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் 157 - 158 தூண்களுக்கு இடையே 40 மீட்டர் நீளத்தில் பாலத்தின் மேற்பகுதி சமீபத்தில் பொருத்தப்பட்டது. இதன் ஒரு பகுதி தூணில் சரியாக பொருத்தப்படாததால் சரிந்து விழுந்தது. இந்த பணியின்போது, போக்குவரத்து மாற்றப்பட்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மேற்கொண்டதால் எந்தவித உயிரிழப்பும், பொருட்சேதமும் ஏற்படவில்லை. சரிந்து விழுந்த பாலத்தின் பகுதியை அகற்றும் பணி நடந்து வருகிறது. விபத்து குறித்து ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது" இவ்வாறு தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
இதற்கிடையே வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் பணிகள் வேகமாக முடிந்து திறக்கப்பட்டால் மட்டுமே கிண்டி முதல் செங்கல்பட்டு வரை உள்ள பல லட்சம் மக்களுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும். பல்வேறு ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் வேளச்சேரி, ஓஎம்ஆர் சாலைகளில் உள்ள நிலையில் , இந்த ரயில் பாதை நிறைவு பெற்றால் தாம்பரத்தில் இருந்து அடையாறு, மயிலாப்பூருக்கு எளிதாக போக முடியும். சென்னையில் வரைபடத்தையே அப்படியே மாற்றக்கூடிய திட்டமாக இருக்கும்.
சென்னையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான திட்டமாக பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடம் இருக்கிறது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக எப்போது தான் முடியும் என்கிற ஏக்கம் தான் இப்போது சென்னைவாசிகளுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உருவாகும் முன் தொடங்கப்பட்டது பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை பணி. ஆனால் சென்னை மெட்ரோ ஆரம்பித்து 55 கிலோமீட்டருக்கு ரயில்கள் போகிறது. மெட்ரோ 2ம் கட்டமாக மௌண்ட் முதல் பூந்தமல்லி வரை விரைவில் ஓடிவிடும் போல.. ஆனாலும் அப்போது கூட பரங்கிமலை பறக்கும் ரயில் ஓடுமா என்று தான் தெரியவில்லை..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications