பயணிகளே எதிர்பார்க்காத பிளான்! 50 ரயில் ஸ்டேஷன்களில் ஷாப்பிங் மால்கள்.. மாஸ் காட்டும் சென்னை மெட்ரோ
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது, 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் மொத்தம் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 2 ஆம் கட்ட வழித்தடத்தில் அமையும் முக்கிய ரயில் நிலையங்களின் நுழைவு பகுதிகளில் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் போன்றவையும் அமைக்கும் வடிவமைப்புடன் கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை முதன் முதலாக தொடங்கப்பட்டது. துவக்கத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. தற்போது பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நகரின் மைய இடங்களுக்கு நெரிசல் இன்றி சொகுசாக பயணிக்க முடியும் என்பதால் மெட்ரோ ரயில் பயணத்தை சென்னை சிட்டி மக்கள் பலரும் விரும்புகிறார்கள்.

மெட்ரோ ரயில்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகள் கட்டணம் இன்றி இதர வழிகளிலும் வருமானம் ஈட்ட திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வணிக வளாகங்கள் அமைக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:-
ஷாப்பிங் மால்கள்: மெட்ரோவில் ரயில் கட்டணம் மட்டும் இல்லாது, இதர வழிகளிலும் வருமானம் ஈட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது காலியாக உள்ள இடங்களில் விளம்பரம் செய்யப்பட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டப்படுகிறது. தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில் நிலைய நுழைவு பகுதிகளை ஒட்டி கடைகள், வணிக வளாகங்கள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் ஆகியவற்றை அமைக்கவும் அதன் மூலம் வருமானம் ஈட்டவும் திட்டமிடபட்டுள்ளது.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்: இது குறித்து ஆய்வு செய்ய டெண்டர் விடப்பட்டு இருக்கிறது. மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டி வணிக வளாகங்கள் அமைப்பதன் மூலம், எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது பற்றியும் ஆய்வு நடைபெறுகிறது. சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2028-ல் மெட்ரோ 2-ஆம் கட்ட வழித்தடம் தொடங்கும் போதே பயன்பாட்டிற்கு வந்துவிடும்" என்றனர்.
மெட்ரோ ரயில் நிலையங்களை ஒட்டியே வணிக வளாகங்கள், உணவகங்கள், கடைகள் போன்றவை அமையும் பட்சத்தில் பயணிளுக்கு இது பெரிதும் பயனளிப்பதாக இருக்கும் என்பதால், பயணிகள் மத்தியில் மெட்ரோவின் இந்த முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ 2ஆம் கட்ட வழித்தடம்: சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தை பொறுத்தவரை மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் சிப்காட் வரையிலும், 4-ஆவது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டா் தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் - சோழிங்கநல்லூா் வரையிலும் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
63 ஆயிரம் கோடி மதிப்பீடு: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடம் சென்னையின் மையப்பகுதியில் செல்கிறது. சென்னையின் மிக முக்கியமான வழித்தடமாக இது உள்ளது. இந்த வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப் பாதையாகவும் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் ரூ.187 கோடி செலவில் பூந்தமல்லியில் 2-ஆவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் பணிமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 3 வழித் தடங்களில் ரூ.63,246 கோடி மதிப்பில் மொத்தம் 116.1 கி.மீ. தொலைவுக்கு மெட் ரோ பணிகள் நடைபெறுகின்றன. இதில், 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications