பிங்க் ஆட்டோ.. இனி சொந்த காலில் நிற்கலாம்! லைசென்ஸ் இருந்தால் போதும்! ஒரு லட்சத்தை அள்ளி தரும் அரசு!
சென்னை: சென்னையில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (பிங்க் ஆட்டோ திட்டம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற சென்னையில் வசிக்கும், ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் பெண்கள் மூன்றாம் கட்டமாக விண்ணப்பிக்கலா, என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்," பெண்களின் பாதுகாப்பு மற்றும் மகளிர்க்கு அதிகாரம் அளித்தலுக்கான பல முன்னெடுப்பு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஒரு புதிய முயற்சியாக, சென்னை மாநகரில் 250 பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்துவதுடன் பெண்களின் பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்திடும் பொருட்டு "இளஞ்சிவப்பு ஆட்டோக்கள்" வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

பிங்க் ஆட்டோ திட்டம்
பெண்கள் சுய தொழிலில் சிறந்து விளங்க ஊக்கப்படுத்தவும், ஓட்டுநர் உரிமம் பெற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இத்திட்டம் வழிவகை செய்யும். ஒவ்வொரு இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட GPS பொருத்தப்பட்டிருக்கும். இது அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல் துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும். இளஞ்சிவப்பு ஆட்டோ பெறும் பயனாளிகளுக்கு கட்டணங்கள் ஏதுமின்றி (commission) "ஊர் கேப்ஸ்" செயலி பயன்படுத்த வழிவகை செய்து தரப்படும்.
பெண்கள் பாதுகாப்பு
சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு CNG ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சர்வதேச மகளிர் தினமான 08.03.2025 அன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
மகளிர் வேலைவாய்ப்பு
இதனை தொடர்ந்து CNG ஆட்டோக்கள் மூன்றாம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 15.09.2025 தேதி வரை விண்ணப்பங்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் வரவேற்கப்படுகின்றன. 1. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ii. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். iv. ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். V. சென்னையில் குடியிருக்க வேண்டும்.
அரசு திட்டம்
எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுனர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை 600 001. சிங்காரவேலர் மாளிகை, 8-ஆவது தளத்தில் செயல்படும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 15-09-2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்." என கூறப்பட்டுள்ளது.
அரசு மானியம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பெண்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு அரசு மானியமாக தலா ஒரு லட்சம் பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை இரண்டு கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாம் கட்டமாக பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கும் தல ஒரு லட்சம் ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகைக்கு வங்கி கடன் வசதியும் செய்து தரப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications