Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போயஸ் கார்டனில் ரஜினியை நடக்க விட்ட ஜெயலலிதா.. தெறிக்கவிட்ட பக்கத்து வீட்டு பெண்.. வாழ்க்கை வட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ரஜினிகாந்த் மற்றும் போயஸ் கார்டன் பகுதி இரண்டையும் அதன் சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. இந்த நிலையில்தான், மிக முக்கிய கோரிக்கை ஒன்றினை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு விடுக்க துவங்கி உள்ளனர்.. என்ன அது?

பிறந்தநாள் மற்றும் பண்டிகை நாட்களில், ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து சொல்லவும், அவரிடமிருந்து வாழ்த்தை பெறவும், அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள், போயஸ் கார்டன் வீட்டு முன்பு திரள்வது வழக்கம்.. அப்படித்தான் நேற்றைய தினமும் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் குவிந்தனர்.

 Chennai Poes Garden Road Jayalalitha House and Actor Rajnikanth house next door lady is tensed due to rajini fans

ரஜினி வீடு: காலை 6:30 மணிக்கே ரசிகர்கள் குவிந்துவிட்டதால், ரஜினி வீட்டு தெருவே பிஸியாகிவிட்டது. இதனால், ரஜினி வீட்டுக்கு அருகிலிருந்த வீட்டுக்காரர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. அவர்களால் தங்களது வீட்டிற்கு உள்ளே செல்லவும் முடியாமல், வெளியே வரவும் முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.. இதனால், அங்கிருந்த பெண் ஒருவர் ரசிகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

"பண்டிகை காலங்களில், இப்படி நெரிசலாக நின்று சத்தம் போட்டால் என்ன அர்த்தம்? பண்டிகை நாள் போலவே எங்களுக்கு தெரியவில்லை.. நல்ல நாளில் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. எங்களால் பிரார்த்தனை செய்ய முடியல.. நாங்களும் வரி கட்டறோம்.. வேண்டுமென்றால் வீட்டிற்குள் அழைத்து ரஜினி, ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லட்டுமே? நீங்களும் வீட்டுக்குள் சென்று வாழ்த்தை வாங்கி கொள்ளுங்களேன்? எங்களை ஏன் இப்படி தொந்தரவு செய்றீங்க" என்று கோபமாக பேசிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.

ஆதங்கம்: அந்த பெண்மணி ஆதங்கத்தை கொட்டிய அந்த வீடியோ, இணையத்தில் வைரலானது.. இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.. "ரசிகர்களை தனது கல்யாண மண்டபத்தினுள் அல்லது வேறேதேனும் தனிப்பட்ட இடத்தில் சந்திக்காமல்.. இப்படி சுற்றி உள்ள வீட்டாரை தொந்தரவு செய்வது ரஜினிக்கு சரியா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

புளு சட்டை மாறன் கேட்ட கேள்வியைதான், இணையவாசிகளும் கேட்டு வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு பிளாஷ்பேக் சம்பவத்தையும் இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.

2 பிரபலங்கள்: போயஸ் கார்டன் என்றாலே - 2 பிரபலங்களின் பெயர்தான் தமிழக மக்களின் கண்முன் வந்து நிற்கும்.. ஒருவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மற்றொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர்கள் 2 பேரின் வீடுகளும் இதே போயஸ் கார்டனில்தான் அமைந்துள்ளன.. அதுமட்டுமல்ல, ரஜினிகாந்த் வீடும், ஜெயலலிதாவின் வீடும் பக்கத்திலேயே அமைந்திருக்கின்றன. 2 பிரபலங்களும் ஒரே இடத்தில் வசிப்பதாலோ என்னவோ, 91ல் ஜெயலலிதா முதல்வரான காலகட்டம் முதலே இருவரை பற்றின செய்திகளும் பத்திரிகைகளில் வெளிவந்தவாறே இருக்கும்.

செக்யூரிட்டிகள்: அதிலும், எப்போதுமே போயஸ் கார்டன் பகுதியில், ஜெயலலிதாவின் செக்யூரிட்டி வாகனங்கள் வரிசை கட்டி நின்றுவிடும். இதனால், அந்த வழியாக ரஜினி வரும்போதெல்லாம் டிராபிக்கில் சிக்கி கொள்ளும் நிலைமை ஏற்பட்டுவிடும். இதுகுறித்து, ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும்கூட, அவரது பாதுகாப்பு வாகனங்கள் மறுபடியும் வரிசைகட்டி நின்றபடியேதான் இருக்கும்.

இப்படித்தான் ஒருநாள், ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தன்னுடைய வீட்டிற்கு செல்ல காரில் வந்து கொண்டிருந்தார் ரஜினி.. வழக்கம்போல், ஜெ.வின் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.. இதனால், அவரால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை.. கடுப்பான ரஜினி, உடனே காரை விட்டு இறங்கி நடந்து சென்றார்..

சூப்பர் ஸ்டார்: ரோட்டில் சூப்பர் ஸ்டார் நடந்து போவதை பார்த்ததுமே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரஜினியை பார்க்க திரண்டு வந்துவிட்டனர்.. இதனால், போயஸ் கார்டன் முழுவதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, ரஜினி வருவதற்காகவே, தனியாக ஒரு வழியை ஏற்படுத்தி தந்தாராம். இதெல்லாம் அப்போது செய்தித்தாள்களில் பரபரப்பாக வெளிவந்த தகவலாகும்.

இன்று ஜெயலலிதா இல்லை.. பிரம்மாண்ட மாளிகையான வேதா இல்லம், இன்று வெறிச்சோடி உள்ளது.. ஆனால், ரஜினியின் வீடு எந்நேரமும் ரசிகர்களால் சூழப்பட்டு வருகிறது. போயஸ் கார்டனின் ஒரே அடையாளமாக, இன்று ரஜினிகாந்த் விளங்கி கொண்டிருக்கிறார்.

ரஜினியை காண வேண்டுமென்று பல்வேறு ஊர்களிலிருந்து, மாநிலங்களிலிருந்து, ஏன் வெளிநாடுகளிலிருந்தும்கூட ரசிகர்கள், போயஸ் கார்டனுக்கு வந்தபடியே உள்ளனர். ரஜினி வீட்டு முன்பு கால்கடுக்க அவர்கள் காத்து கொண்டுதானிருக்கிறார்கள். தன்னுடைய தலைவனின் முகத்தை ஒருமுறையாவது பார்த்துவிட மாட்டோமா? என்று சோறு தண்ணி இல்லாமல் வெயிலிலும், மழையிலும் ஏங்கி தவிப்பதை, தமிழக மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

வாழ்த்து மழை: போயஸ் கார்டனே அதிரக்கூடிய "தலைவா வாழ்க" என்ற வாழ்த்து மழைக்கு நடுவில், பால்கனியில் நின்று, தன்னுடைய முகத்தை காட்டி, இரு கைகளையும் மேலே உயர்த்தி, ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு, இரண்டே நிமிடத்தில் மறுபடியும் வீட்டிற்குள் சென்றுவிடும் ரஜினியையும் மக்கள் கவனிக்க தவறில்லை.

2 மாதத்துக்கு முன்புகூட, சேலத்தை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர், ரஜினிகாந்த்தை சந்திக்க சென்னை வந்திருந்தார்.. நடுராத்திரியில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார். "கிளாஸ் டீச்சரை பார்த்துவிட்டு வருகிறேன்" என்று வீட்டில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு, கோயம்பேட்டிற்கு வந்து, அங்கிருந்து நடுராத்திரி போயஸ் கார்டனுக்கு வந்துள்ளார்.

10ம் வகுப்பு மாணவி: ரஜினி வீட்டு முன்பிருந்த செக்யூரிட்டிகள், போலீசுக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும், அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனாலும், நள்ளிரவில் 10 கிளாஸ் பெண், சென்னையில் தனித்து பயணித்து வந்திருப்பது ஆபத்தானது.. அந்த பெண்ணுக்கு ஏதாவது விபரீதம் நேர்ந்திருந்தால், அதற்கு யார் பொறுப்பேற்பது?

இப்படி ரஜினி மீது அபரிமிதமான அன்பை காட்டி, உயிரையே கொடுக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்றுவரை மலைக்க வைக்கிறார்கள்.. ரஜினியிடம் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், வெறும் பாசத்தை மட்டுமே கொட்டி வருகிறார்கள்..

பொறுப்பு : தன்னுடைய ரசிகர்களை, போயஸ் கார்டன் வீட்டுக்கு வரும்படி, ரஜினிகாந்த் உத்தரவிடவில்லை, யாரையும் அவர் கட்டாயப்படுத்தவுமில்லை.. என்றாலும், உயிருக்குயிரான தன்னுடைய ரசிகர்களை பாதுகாக்கும் பொறுப்பும், அக்கறையும் ரஜினிகாந்த்துக்கு இருக்கவே செய்கிறது. அத்துடன், தனக்காக, அடுத்த வீட்டுக்காரர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற பொதுநலனும் ரஜினிகாந்த்துக்கு தேவையாக இருக்கிறது.

பலவருட ஆதங்கத்தை இன்று நட்டநடு வீதியில் நின்று கொட்டிவிட்டு போயிருக்கிறார் ஒரு வயதான பெண்மணி..!!

தன்னுடைய ரசிகர்களை எப்படி "கவனிக்க" வேண்டும் என்ற யதார்த்தத்தையும் ரஜினிக்கே உரக்க சொல்லிவிட்டு போயிருக்கிறார் இந்த பெண்மணி..!!
ராகவேந்திரா: ரஜினிகாந்த்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபம் இதே சென்னையில் உள்ளது.. பரந்து விரிந்த பள்ளியும் இதே சென்னையில்தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது.. இன்னும் இதுபோல் எத்தனையோ இடங்கள் ரஜினிக்கு சொந்தமாக உள்ளன.. இனியாவது, தன்னுடைய ரசிகர்களை, வெயிலிலும், மழையிலும் அவதியடைய வைக்காமல், பிரத்யேக இடம் ஒதுக்கி, அவர்களை சந்திக்க வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கையாக உள்ளது. அத்துடன், நாம் பிறருக்கு உபத்திரமாக இருந்துவிடக்கூடாது என்ற வேண்டுகோளையும் நாம் விடுக்க வேண்டியிருக்கிறது.

ஆக, அன்று ஜெயலலிதாவால், போயஸ்கார்டன் வீதியில் தான் பட்ட சங்கடத்தை, இன்று தன்னால் பிறரும் பட நேரிட்டுள்ளது என்பதை ரஜினிகாந்த் மனசார உணர வேண்டும்...!!

மொத்தத்தில், "வாழ்க்கை ஒரு வட்டம்தான் இல்லை"??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+