சென்னையில் சொந்த வீடு.. பால் காய்ச்சிய சசிகலா.. மொத்தம் ₹1,520 கோடி? படக்குனு கையை விட்டுப்போன "ஜாஸ்"
சென்னை: இன்று போயஸ் கார்டனில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டுக்கு எதிர்வீட்டிலேயே, பங்களா கட்டி கிரகப்பிரவேசம் செய்திருக்கிறார் விகே சசிகலா.. இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது.
சென்னை போயஸ் தோட்டத்தில் வேதா இல்லத்திற்கு அருகிலேயே, மிகப்பெரிய அளவில் வீடு கடிவந்தார் சசிகலா. ஆனால், அப்போது அமலாக்கத்துறை வீடு முன்பு ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டிவிடவும், போயஸ் இல்லத்தில் குடியேற முடியாமல் போய்விட்டது.

அண்ணன் மகள்: எனவே, சிறையிலிருந்து விடுதலையான பிறகு, போயஸ் கார்டன் வீட்டு பக்கம் போகமுடியாமல், தி.நகரிலுள்ள தன்னுடைய அண்ணன் மகள் வீட்டில்தான் சசிகலா இதுநாள்வரை குடியிருந்து வந்தார்..
சசிகலாவின் சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை மொத்தம் 10 கோடியாகும்.. அதேபோல, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, சசிகலா தொடர்பான ரூ1,520 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்தது அமலாக்கத்துறை.. இதையடுத்து, ரூ480 கோடி அபராதத் தொகையை சசிகலா செலுத்தியுள்ளார்.
கிரகப்பிரவேசம்: இதன் காரணமாகவே இதுவரை முடக்கப்பட்ட சசிகலாவின் அத்தனை சொத்துகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே, போயஸ் இல்லம் கட்டுமானப்பணி விரைவாக நடந்துமுடிந்து, இன்று காலை கிரகப்பிரவேசமும் நடந்துள்ளது.
இருந்தாலும், சசிகலா ஏன் திடீரென கொடநாடு சென்றார்? என்ற சந்தேகம் வட்டமடித்து கொண்டேயிருக்கிறது. சிறையிலிருந்து விடுதலையாகி 2 வருட காலமாகியும், சென்னையில்தான் தங்கியிருக்கிறார் சசிகலா.. ஒருமுறைகூட கொடநாடு பக்கம் போகவில்லை.
ஆன்மீக பயணம்: அடிக்கடி ஆன்மீக சுற்றுப்பயணம், நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு சென்றுவந்தாலும்கூட, கொடநாடுக்கு செல்லாமலேயே இருந்து வந்தார்.. 7 வருடம் கழித்து கொடநாடுவுக்கு எதற்காக சசிகலா சென்றார்? என்பது குறித்து சில தகவல்கள் நமக்கு பிரத்யேகமான கிடைத்துள்ளன.
அதாவது, சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் தண்டனைப்பெற்ற சசிகலாவுக்கு சிறை தண்டனையும் + 480 கோடி ரூபாய் ஃபைன் விதிக்கப்பட்டது. 480 கோடி ரூபாய் கட்டும் வரையில் முடக்கப்பட்ட சொத்துகள் விடுவிக்கப்படாது என்பதே நிலைமையாக இருந்து வந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், சில மாதங்களுக்கு முன்பு, ஜாஸ் சினிமா உள்ளிட்ட சொத்துக்களை விற்றிருக்கிறார் சசிகலா.
கொடநாடு: இதில் கிடைத்த தொகையில், 480 கோடி ரூபாயை கட்டிவிட்டதால், முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டன. அதில் கொடநாடு சொத்தும் ஒன்று. அதனால்தர்ன, கொடநாடு சென்று முக்கியமானவைகள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா ? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த கொடநாடு கொள்ளை சம்பவத்தில் என்னென்னவெல்லாம் திருடு போனது? என்பதையெல்லாம் ஆராய்வதற்காகவே கொடநாடு சென்றாராம் சசிகலா.












Click it and Unblock the Notifications