மேம்பால கட்டுமான பணி.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்! வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!
சென்னை: சென்னையில் மெட்ரோ பணிகள், மற்றும் பாலம் கட்டுமான பணிகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனை சரி செய்ய மாற்றுவழியில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாளை மறுநாள் முதல் கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றப்படுகிறது.
வேலை வாய்ப்பு, தொழில் முதலீடு, மருத்துவம், கல்வி, சுற்றுலா என சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அவர்களுக்கான போக்குவரத்து தேவையும் அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே புறநகர் ரயில், மெட்ரோ, மாநகர பேருந்துகள் ஆகியவை இருந்தாலும் டாக்ஸி, சொந்த கார்கள் மற்றும் பைக்குகளின் பயன்பாடு கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது.

கடந்த 1981ல் சென்னையில் சுமார் 1.20 லட்சம் வாகனங்கள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது 2016ல் 4.75 லட்சமாகவும், 2017ல் 5.30 லட்சமாகவும், 2020ல் 6.35 லட்சமாகவும் உயர்ந்திருக்கிறது. இன்றய தேதியில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இத்தனை வாகனங்கள் சாலையில் செல்லும் போது எவ்வளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை நினைத்து பாருங்கள்.
ஆனால் இந்த நெரிசலை சமாளிக்க பாலங்கள், புதிய சாலைகள் போன்றவற்றையும் மாநில அரசு அவ்வப்போது கட்டி வருகிறது. தவிர புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சோகம் என்னவெனில், இந்த கட்டுமான பணிகளால்தான் போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகரித்திருக்கிறது. சென்னை தற்போது சந்தித்திருக்கும் பெரிய பிரச்னை இதுதான். எனவே மாற்று பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வருகின்றன.
நாளை மறுநாள் முதல் கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர். சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது,
"சென்னை கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சோதனை ஓட்டம் அடிப்படையில் வரும் 22.12.2024 முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமுல்படுத்தப்படும்.
1. அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் OMR சாலை நோக்கி திருப்பி விடப்படும். அந்த வாகலங்கள் 400 மீட்டர் தூரம் சென்று தரமணி CPT பாலிடெக்னிக் கல்லூரியின் முன்புறம் "U" திருப்பம் அனுமதிக்கப்பட்டு, மத்திய கைலாஷ் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடைய அனுமதிக்கப்படும்.
2. கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ஓ.எம்.ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தற்போது போலவே எந்த மாற்றும் இல்லாமல் செல்லலாம். 3.ஓ.எம்.ஆர்-ல் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மத்திய கைலாஷ் கோயிலின் நியமிக்கப்பட்ட தனிப்பாதையில் அனுமதிக்கப்படும். பயணிகளை பின்புறத்தில் இறக்கிவிட இந்த போக்குவரத்து மாற்றமானது மத்திய கைலாஷ் சந்திப்பில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதோடு, சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்யும்" என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications