பங்களா வீட்டில்.. அக்கா - தங்கை சேர்ந்து செய்த காரியம்.. மிரண்டு போன சென்னை போலீஸ்!!
சென்னை: பங்களா வீட்டில் அக்கா - தங்கை இருவரும் சேர்ந்து செய்த காரியத்தை பார்த்து சென்னை போலீசார் மிரண்டு போய்விட்டனர்.. இருவரையும் மடக்கி பிடித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகிறார்கள்!
சென்னை, எழும்பூர், சுலைமான் சக்ரியா அவென்யூ, காசா மேஜர் ரோட்டில் வசித்து வருபவர் டாக்டர் கோகுல்தாஸ்.. இவர் பிரபலமான டாக்டர் ஆவார்.. ஒரு பெரிய பங்களா வீட்டில் குடியிருப்பவர்.. வயது 84 ஆகிறது!
பெரிய வீடு என்றாலும், கோகுல்தாஸும் அவரின் மனைவியும் மட்டும்தான் இங்கு தங்கியிருந்தனர். கோகுல்தாஸின் மகன் கல்யாண்குமார், ஒரு தொழிலதிபர்.. எழும்பூரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 6,00,000 ரூபாயை பீரோவில் வைத்து கல்யாண்குமார் பூட்டி வைத்துள்ளார்... சில நாள்களுக்கு பிறகு பீரோவை திறந்து பார்த்தால், பணம் இல்லை.. அதனால், பெற்றோரிடம் பணம் குறித்து விசாரித்தார்.. அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டனர்.

தங்க பிஸ்கட்
அதனால் அதிர்ச்சி அடைந்த கல்யாண்குமார், குடும்ப நகைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தார்.. அப்போது, தங்க நகைகள், தங்க பிஸ்கட்கள் மாயமாகி இருந்ததை கண்டு மேலும் திடுக்கிட்டார்.. அதனால், உடனடியாக எழும்பூர் ஸ்டேஷனில் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் புகார் தந்தார்.. அதனடிப்படையில் போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர்.. அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராவையும் ஆய்வு செய்தனர்... கல்யாண்குமாரின் பெற்றோரிடமும் விசாரித்தனர்.

பங்களா
அப்போது அவர்கள், நாங்கள் பகலில் தூங்கிவிடுகிறோம், எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர்.. வயது, மூப்பு காரணமாக 2 பேரும் தூங்கியிருக்கலாம் என போலீசார் நினைத்து விட்டுவிட்டனர்.. அதன்பிறகு பங்களாவில் வேலை செய்வோரிடம் விசாரணை நடத்தப்பட்டது... சேத்துப்பட்டுவை சேர்ந்த லோகநாயகி 48, அவரின் தங்கை ஷாலினி, 34 இவர்களிடம் விசாரிக்கும்போது மாற்றி மாற்றி உளறினர்.

தம்பதி
கடைசியில், இருவரும்தான் நகை, பணத்தை திருடியதாக ஒப்புக் கொண்டனர். அக்கா - தங்கை 2 பேரும் சேர்ந்து கோகுல்தாஸ், அவரின் மனைவிக்கு பகலில் தூக்க மாத்திரையை பொடி செய்து, சாப்பாட்டில் தந்துள்ளனர்.. சாப்பிட்டதும் தம்பதி இருவரும் தூங்கி வந்துள்ளனர்... அந்த சமயத்தில், கள்ளச்சாவி போட்டு பீரோவை திறந்து இருவரும் வேலையை காட்டி உள்ளனர். இப்போது இவர்களிடம் ஒன்றரை கிலோ தங்க நகைகள், 8 தங்க பிஸ்கட்கள், லட்சக்கணக்கில் பணம், சொகுசு கார் போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

விசாரணை
இவற்றை எல்லாம் மொத்தமாக திருடாமல் கொஞ்சம் கொஞ்சமாக திருடி வந்துள்ளனர். வயதான தன் பெற்றோரை கவனிக்க இந்த அக்கா - தங்கையை கல்யாண்குமார்தான் 2 வருடத்துக்கு முன்பு வேலைக்கு சேர்த்துள்ளார்... சேலைக்குள் மறைத்து நகை, பணத்தை திருடி.. அதில் லோகநாயகியும் ஷாலினியும் சொகுசாக இதுநாள் வரை வாழ்ந்து வந்துள்ளனர்.. இப்போது வசமாக சிக்கி உள்ளதால், தீவிர விசாரணை நடக்கிறது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications