அடப்பாவி… இப்படியும் ஒரு திருடனா…. ஆச்சரியம் அடைந்த போலீசார்
சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக கேஸ் சிலிண்டர்களை மட்டுமே குறி வைத்து திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர் நகர், கே.கே நகர், அசோக் நகர், வளசரவாக்கம், போரூர், ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் தொடர்ச்சியாக சிலிண்டர் திருட்டு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. காலை நேரங்களில் வீடுகளுக்கு கேபிள் ஆபிரேட்டரை போல ஒருவர் வருகிறார்.

பின்னர் அந்த நபர் வீட்டில் இருப்பவர்களின் கவனத்தை திசை திருப்பி சிலிண்டர்களை திருடிவிட்டு தப்பியோடி விடுகிறார் என்று போலீசாரின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் சிலிண்டர்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் புதுச்சேரியை சேர்ந்த அசோக் குமாரை கைது செய்தனர். 100 க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை திருடிய அசோக் குமார், திருடிய சிலிண்டர்களை அருகிலுள்ள கடைகளில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருடிய சிலிண்டர்களை விற்பனை செய்த கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.பின்னர் அங்கிருந்து 20க்கும் மேற்பட்ட சிலிண்டர்களை கைப்பற்றினர். திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications