Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதை பொருள் தடுப்பு அலுவலகத்திலிருந்தே மெத்தபெட்டமைன் விற்பனை.. சென்னையில் என்சிபி காவலர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதைப் பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய போதைப் பொருள் தடுப்பு காவலர்களே மெத்தபெட்டமைன் போதைப் பொருளைக் கடத்திய சம்பவம் நடந்துள்ளது. மெத்தபெட்டமைன் போதை என்சிபி அலுவலகத்தில் இருந்து எடுத்து வந்து விற்றதாக என்சிபி காவலர்கள் ஆனந்தன் மற்றும் சமீர் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே போதைப்பொருள் பயன்பாடு கணிசமாக அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

chennai police crime

ஷாக் சம்பவம்: அதிரடியாக ரெய்டு நடத்தி, போதைப் பொருளைக் கடத்தி விற்பனை செய்வோரை போலீசார் தடாலடியாகக் கைது செய்து வருகிறார்கள். இதற்கிடையே போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க வேண்டிய என்சிபி போலீசாரே அதை விற்பனை செய்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மெத்தபெட்டமைன்: சென்னையில் சமீப காலமாக மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்த மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சென்னை போலீசில் ஏ.என்.ஐ.யு என்ற யூனிட் தனியாக தொடங்கப்பட்டது. இவர்கள் சென்னையில் 4 மண்டலங்களிலும் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தலைக் கண்காணித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அசோக் நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஜேம்ஸ் என்ற காவலர் போதைப் பொருளைப் பயன்படுத்துவதாகத் தகவல் கிடைத்தது. அதன்படி தி.நகர் தனிப்படை போலீசார் அங்குச் சென்று ஜேம்ஸை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொன்ன தகவல்கள் தனிப்படை போலீசாரை மிரள வைப்பதாக இருந்தது.

என்சிபி காவலர்கள்: அதாவது மத்திய போதைப் பொருள் காவலரான ஆனந்தன் என்பவரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, அதை விநியோகம் செய்வதாகக் காவலர் ஆனந்தன் கூறியிருக்கிறார். இதையடுத்து என்சிபி காவலரான ஆனந்தனின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்புப் படையினர் சோதனை செய்தனர். ஆனந்தனையும் கைது செய்து விசாரிக்கத் திட்டமிட்டனர். இருப்பினும், ஆனந்தன் அதற்குள் தலைமறைவானார்.

என்சிபி அலுவலகத்தில் இருந்து விற்பனை: அவரை தேடி வந்த போலீசார், இப்போது அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதில் சமீர் என்ற மற்றொரு நபருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் கைது செய்து போலீசார் இப்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரும் என்சிபி அலுவலகத்தில் இருந்து போதைப் பொருள் எடுத்து வந்து விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெத்தபெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அடுத்தடுத்து வரிசையாகக் காவலர்கள் கைது செய்யப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+