இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர்கள் மீது வழக்குப் பதிவு! சென்னை போலீஸ் ஆக்ஷன்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்தும், ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கு நிர்வாகம் முன்வரதாதைக் கண்டித்தும் சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இடதுசாரி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஊதிய உயர்வு குறித்து பேசுவதற்கு நிர்வாகம் முன் வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக போலீசார் அனுமதி அளிக்காததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாரைக் கண்டித்து இடதுசாரி கட்சியினர் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடி போராட்டம் நடத்தியதன் காரணமாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்












Click it and Unblock the Notifications