நியூ இயர்.. போதையில் வண்டி ஓட்டினால் லைசென்ஸ் கட்.. சென்னை போலீஸ் வார்னிங்
குடித்துவிட்டு வண்டி ஓட்டக்கூடாது என சென்னை போலீஸ் எச்சரித்துள்ளது.
Recommended Video

சென்னை: புத்தாண்டு அன்று குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நியூ இயர் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறும். அதேபோல, இந்த ஆண்டும் 2019ஆம் ஆண்டை சிறப்பாக வரவேற்க சென்னைவாசிகள் தயாராகி விட்டனர்.
பொதுவாக புத்தாண்டு அன்று, சென்னை பீச் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது வழக்கம்.

அசம்பாவிதங்கள்
ஆனால் ஒரு சிலரோ குடித்துவிட்டு, வாகனங்கள் ஓட்டுவது, அதன்மூலம் அசம்பாவிதங்களை ஏற்படுத்துவது என்ற செயல்களிலும் இறங்கிவிடுவர். இதனால், நாளை அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் போலீசார் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பைக் ரேஸ்
இது தொடர்பாக சென்னை காவல்துறை சார்பில் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பைக் ரேஸை அன்றைய நாளில் இல்லாமல் செய்வதற்காக, 20 பைக் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போலீசார் குவிப்பு
சென்னையில் 368 இடங்களில் வாகன தணிக்கைக் குழு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மயிலாப்பூர், ராயபேட்டை, தி.நகர். திருவல்லிக்கேணி, மந்தவெளி, கிண்டி, கீழ்ப்பாக்கம், அடையார், தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் மற்றும் மெரீனா, எலியட்ஸ் பீச்சுகளிலும் போலீசார் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

டிரைவிங் லைசென்ஸ்
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், அவர்களின் டிரைவிங் லைசென்ஸ் உடனடியாக ரத்து செய்யப்படும். இதனால், பின்னாளில் பாஸ்போர்ட், விசா முதலானவற்றை எடுக்கும் போது அதற்கு தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்படும்" இவ்வாறு மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications