சென்னை ஓஎம்ஆர் சாலைக்கு போறீங்களா? ரூட்டு மாற்றிட்டாங்களாமே! எப்படி போவீங்க? இதோ புது ரூட்!
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள சாலைகளில் முக்கிய சாலையாக திகழ்வது ராஜீவ்காந்தி சாலைதான். மத்திய கைலாஷை ஒட்டியுள்ள சாலை இது. இங்கு நிறைய ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தரமணி ஐடி பார்க் இந்த சாலையில்தான் அமைந்துள்ளது.

இந்த நிலையில் இங்கு மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை ஓஎம்ஆர் சாலையில் வாகனங்கள் எளிதாக செல்வதற்கு வசதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சோழிங்கநல்லூரில் இருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படுகின்றன.
காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ் காந்தி சாலையில்) திருப்பிவிடப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.
இதேபோல், மாநகராட்சி சாலையில் இருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச்சாவடியில் புதிய யு டர்னில் சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும். வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications