"CCTV".. வீட்டுக்கு வெளியே என்ன நடந்தது? ஜெயக்குமாரை ரகசிய ஸ்பாட்டுக்கு கூட்டி போய்! பரபர நிமிடங்கள்
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று இரவு கைது செய்யப்பட்ட பின் என்ன நடந்தது என்பது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
திமுக நிர்வாகி ஒருவரை அடித்து, அரைநிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டி சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் திமுக நிர்வாகியை அடித்து தாக்கிய இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் தற்போது 15 நாட்கள் நீதிமன்ற காவல் பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

ஜெயக்குமார்
இதில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட போது அவர் வீட்டிற்குள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். அவர் சரியாக சாப்பிட்டு முடித்து கை கழுவும் நேரத்தில் போலீசார் பட்டினப்பாக்க வீட்டு கதவை தட்டி உள்ளனர். போலீஸ் வருவது ஜெயக்குமாருக்கு சில நிமிடங்களுக்கு முன் தெரிந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் வந்த போது வீட்டு கதவை முதலில் ஜெயக்குமார் தரப்பு திறக்கவில்லை. பின்னர் போலீசார் பலமாக வீட்டு கதவை தட்டி இருக்கின்றனர். 4-5 முறை கதவு தட்டப்பட்ட பின் போலீசாரை உள்ளே விட்டுள்ளனர்.

மனைவி ஜெயக்குமார்
அப்போது ஜெயக்குமார் - அவரின் மனைவி ஹாலில் அமர்ந்து இருந்தனர். சாப்பாடு தட்டுகள் அங்கேயே இருந்துள்ளது. அப்போது ஜெயக்குமாரை பிடித்து அழைத்து செல்ல போலீசார் முயன்று உள்ளனர். கிழக்கு மண்டல இணை ஆணையர் பிரபாகரன், மாதவரம் துணை ஆணையர் சுந்தரவனம் ஆகியோர் ஜெயக்குமார் கையை பிடிக்க முயன்று உள்ளனர். ஆனால் ஜெயக்குமார் தரப்பு.. அதெல்லாம் தொடாதீங்க.. சரியில்லை என்று கூறி உள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்கு வாதம் நடந்தது.

வீடியோ
இது வீடியோவாகவும் வெளியானது. ஜெயக்குமாரிடம் போலீசார்.. சரி உங்களை தொடவில்லை.. எங்களிடம் எப்ஐஆர் உள்ளது முறைப்படிதான் கைது செய்கிறோம். நீங்களே எங்களுடன் வாருங்கள் என்று கூறி கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். அவர் கைலி கட்டி இருக்கிறேன் மாற்றிவிடுகிறேன் என்று கூறி உள்ளார். ஆனால் போலீசார் அதற்கு அனுமதிக்கவில்லை. இதையடுத்து கைலியோடு போலீசார் அவரை அழைத்து சென்றனர். அவர் வீட்டை விட்டு வெளியே சென்ற போது அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் அனைத்து காட்சிகளும் பதிவானது.

சிசிடிவி
4 போலீசார் ஜெயக்குமாரை போலீசார் வாகனத்தில் ஏற்றினர். கைலியோடு ஜெயக்குமார் நடந்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏறினார். அப்போது அவரை சுற்றி 40க்கும் மேற்பட்ட போலீசார் மொத்தமாக குதித்து அவரின் வாகனத்திற்கு பாதுகாப்பு கொடுத்தனர். அந்த நேரத்தில் சில தொண்டர்கள் அங்கே குவிந்ததால் இந்த பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் சிலர் அந்த தெரு முடியும் வரை வாகனத்திற்கு பாதுகாப்பாக வந்தனர். இதையடுத்து போலீஸ் வாகனத்தை வேகமாக எடுத்துக்கொண்டு பறந்தனர்.

போலீஸ் ரகசிய ஸ்பாட்
திட்டப்படி ஜெயக்குமாரை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்குத்தான் கொண்டு செல்ல வேண்டும். இந்த தகவல் தெரிந்து அதிமுக தொண்டர்கள் அங்கு மொத்தமாக குவிந்தனர். அங்கு சாலை மறியல் செய்ய முயன்றனர். இது பெரிய சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆனால் போலீஸ் எதற்கும் தயாராகவே இருந்தது. அதனால் ஜெயக்குமாரை போலீசார் நுங்கம்பாக்கம் அழைத்து செல்லவில்லை. சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற 15வது நீதித்துறை நடுவர் முரளி கிருஷ்ண ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தும் முன் வேறு ஒரு இடத்திற்கு அழைத்து சென்றனர்.

வேறு ஒரு இடம்
வேறு ஒரு ரகசிய ஸ்பாட்டில் இரவு நேரத்தில் ஜெயக்குமாரை வைத்து உள்ளனர். பாதுகாப்பு கருதி இப்படி செய்யப்பட்டுள்ளது. அங்கு அவரிடம் சில மணி நேரங்கள் விசாரணை நடந்துள்ளது. அப்போது அவர் உடை மாற்றிக்கொள்ள அனுமதி கேட்டதாகவும், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டால் உடை வாங்கிக்கொள்ள முடியும் என்று போலீசார் தரப்பு கூறியதாக தெரிகிறது. அங்கு சில மணி நேரங்கள் வைக்கப்பட்ட ஜெயக்குமார் பின்னர் மேஜிஸ்டிரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 15 நாட்கள் காவல் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications