அண்ணா நகர் ஓட்டல் உணவு .. பைக்கில் போனபடி ரிவ்யூ.. பெண் யூடியூபருக்கு சென்னை போலீஸ் அளித்த பரிசு
சென்னை: சென்னை அண்ணா நகரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியபடி ஓட்டல் உணவு பற்றி விமர்சனம் செய்த பெண் யூடியூபருக்கு சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்துள்ளது.
சென்னை மாநகருக்குள் எந்த வெளியூர் பேருந்துகளும் வருவது இல்லை.. இரவு நேரங்களை தவிர மற்ற நேரங்களில் சென்னைக்குள் வெளியூர்களில் இருந்து கனரக வாகனங்கள் நுழையவே முடியாது.. இது தவிர மெட்ரோ ரயில், மின்சார ரயில் என எல்லா பக்கமும் ரயில்களும் ஓடுகிறது.. சிக்னலுக்கு சிக்னல் மேம்பாலங்களும் இருக்கிறது. சென்னையின் எல்லா முக்கியமான ரயில்வே கிராசிங்கிலும் மேம்பாலங்கள் இருக்கிறது.

ஆனாலும் வாகன போக்குவரத்து என்பது சென்னையில் மிக கடுமையாக இருக்கிறது.. தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி உள்பட எந்த நகரத்திலும் இல்லாத அளவிற்கு எல்லா சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. சென்னையில் லட்சக்கணக்கான கார்கள் ஓடுகின்றன. இதேபோல் பல லட்சம் இருசக்கர வாகனங்கள் ஓடுகின்றன.. பல ஆயிரம் பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்கின்றன. கத்திப்பாரா, ஓஎம்ஆர், ஜிஎஸ்டி, ரேடியல் சாலை, வடபழனி சாலை, ஈசிஆர், அண்ணா சாலைகளில், 10 நிமிடம் வாகனங்கள் ஸ்தம்பித்தாலே சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும் நிலை இருக்கிறது.. இதனால் பல சாலைகளில் ஒரு வழிப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சாலைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ்.. சென்னையில் மற்ற ஊர்களை போல் இல்லை.. எங்கு யார் டிராபிக் விதிமுறைகளை மீறினாலும் எளிதாக உட்கார்ந்த இடத்தில் இருந்த இடத்தில் இருந்தே போலீசாரால் பார்க்க முடியும். டிராபிக் விதிமுறைகளை மீறியவர்கள் குறித்து ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.
ட்விட்டரை டேக் செய்து, எந்த ஏரியா, எந்த தெரு என்பதை சொல்லி விதிமீறல் குறித்த புகைப்படம் மற்றும் வாகன எண்ணை சொன்னால் போதும்.. சென்னை போலீஸ் வாகன ஓட்டிகளின் அபராதம் விதித்து அதை அவர்கள் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிவிடும்.. எனவே இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் செல்வது, நம்பர் பிளேட் சரியில்லாமல் ஓட்டுவது, அசுர வேகத்தில் வாகனம் ஓட்டுவது, ஒருவழிப்பாதையில் செல்வது போன்ற குற்றங்களுக்கு போலீசாரால் எளிதாக அபராதம் விதிக்க முடியும்.
இதேபோல் கார்களுக்கும், சிக்னலை மீறி சென்றால், ஒருவழிப்பாதையில் சென்றால், தவறான இடத்தில் பார்க்கிங் செய்தால், ரேஸ் சென்றால் போலீசாரால் எளிதாக அபராதம் விதிக்க முடியும்.. சோதனையில் மட்டுமின்றி ஆன்லைனிலும் நிச்சயமாக அபராதம் விதிக்க முடியும். அதற்கு ஏற்ற வகையில் நவீன கேமராக்கள் சிக்னல்களில் உள்ளன.
இந்த நிலையில் இளம்பெண் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடியே சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலின் உணவு குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் விதிமுறையை மீறி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியபடி ஓட்டல் உணவு குறித்து விமர்சித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தார. மேலும் அந்த வீடியோவை சென்னை போக்குவரத்து போலீசாரின் சமூக வலைதளத்திலும் டேக் செய்திருந்தார். இதையடுத்து அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 'யூடியூபர்’ பெண்ணுக்கு ரூ.1,000 அபராதம் விதித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications