சென்னை போலீஸ் அடுத்த அதிரடி.. 'வேறவெலல் பிளான்'.. ரெடியாகும் புதிய வாகனம்!
சென்னையில் போலீஸ் மட்டுமல்ல போலீஸ் ஸ்டேசனே நடமாடப்போகிறது.
சென்னை: சென்னையில் போலீஸ் மட்டுமல்ல போலீஸ் ஸ்டேசனே நடமாடப் போகிறதாம். சென்னை காவல்துறையில் ஒருங்கிணைந்த நடமாடும் கட்டுப்பாடு வாகனத்தை பயன்படுத்துவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை போலீசார் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க பல்வேறு வழிகளை பின்பற்றுகிறார்கள். குறிப்பாக போக்குவரத்து போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், நள்ளிரவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றுவோரை பிடிக்க தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்தவும் சிசிடிவி கேமரா, ட்ரோன் உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்களை சென்னை காவல்துறை பயன்படுத்துகிறது. சென்னையில் நள்ளிரவில் யாரேனும் தேவையின்றி சுற்றினால், ஒரு ஆப் மூலம் போட்டோ எடுத்து அவர்கள் பழைய குற்ற வழக்கில் தொடர்புடையவர்களா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஏதேனும் குற்றவாளிகள் சிக்கினால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கையும் எடுக்கிறார்கள்.

கண்காணிப்பு கேமரா
இதேபோல் டிராபிக் சிக்னலில் நிற்காமல் செல்பவர்களை கேமராவில் கண்காணித்து அபராதம் விதிக்கிறார்கள். மேலும் ஒன்வேயில் செல்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீசார் சென்னை முழுவதுமே கிட்டத்தட்ட கண்காணிப்பு கேமராக்களை பொறுத்திவிட்டனர். குற்றவாளிகள் எங்கு சென்றாலும் தப்பிக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி உள்ளனர்.

காவல்துறை திட்டம்
இதனிடையே அடுத்தகட்டமாக நடமாடும் போலீஸ் ஸ்டேசனாக வாகனத்தை பயன்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. அதிக கூட்டம் இருக்கும் இடங்களில் இந்த வாகனத்தை பயன்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துக்கு பயன்படுத்தும் ஏஎன்பிஆர் கேமராக்களையும், குற்றவாளிகளை அடையாளம் காணும் மென்பொருள் வசதிகளையும் இந்த வாகனத்தில் பயன்படுத்தி கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

பெரிய உதவி
கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்த நடமாடும் போலீஸ் ஸ்டேசன் கொண்டுவரப்பட்டால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போலீசாருக்கு எளிதாக இருக்கும். ஏனெனில் கண்காணிப்பு கேமரா மற்று மென்பொருள் வசதிகள் இருப்பதால் குற்றவாளிகள் எங்கெனும் சுற்றினால் அவர்களை பிடித்துவிட முடியும். இதுமட்டுமின்றி சட்டம் ஒழுங்கை பராமரிக்க போலீசாருக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபராதம்
இதனிடையே சென்னை போக்குவரத்து காவல்துறை கடந்த வாரம் வெளியிட்டிருந்த ஒரு ட்வீட் பதிவில், ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை மட்டும் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய 843 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இவர்களிடம் இருந்து மட்டும் Rs.87,13,000 வசூல் செய்யப்பட்டதாவும், கடந்த இரண்டு வாரங்களில் 1628 வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் அதில் 1.68 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை வீடுகள்
சென்னை போலீஸார் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது, அதன் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த பகுதி போலீஸார் தினமும் இரவு நேரத்தில் 3 முறை கண்காணிப்பார்கள் என்று கூறியிருந்தது. ஸ்மார்ட் காவலர் செயலியைப் பயன்படுத்தி போலீஸாருக்கு புதிய மின்னணு பிரிவு அமைப்பை அறிமுகப்படுத்தி ரோந்துப் பணியை காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications