பெட்ரூமில் மர்ம நபர்களை அனுமதித்த சர்ச்சை- பாஜகவின் சசிகலா புஷ்பா உட்பட 3 பேர் மீது போலீஸ் வழக்கு!
சென்னை: சென்னை அண்ணாநகர் வீட்டு பெட்ரூமில் மர்ம நபர்களை அனுமதித்ததாக 2-வது கணவர் ராமசாமி தெரிவித்த புகாரின் அடிப்படையில் அவரது மனைவியும் பாஜக பிரமுகருமான முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவர் சசிகலா புஷ்பா. திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவுடன் டெல்லி விமான நிலையத்தில் மல்லுக்கட்டி சசிகலா புஷ்பா மோதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜ்யசபா சர்ச்சை, நிர்வாண மசாஜ்
இது தொடர்பான விசாரணையின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் தம்மை தாக்கினர் என ராஜ்யசபாவில் பகிரங்கமாக குற்றம்சாட்டி மேலும் பரபரப்பை கிளப்பியவர் சசிகலா புஷ்பா. இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்கள், சசிகலா புஷ்பா, அவரது முதல் கணவர் மற்றும் மகன் ஆகியோருக்கு நிர்வாண மசாஜ் செய்ய வலியுறுத்தியதாக புகார் தெரிவித்தது சர்ச்சையை அதிகமாக்கியது.

டெல்லியில் 2-வது திருமணம்
இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞரை தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிநாடார் மிரட்டினார் என்பதும் வழக்கு. இந்த நிலையில் சசிகலா புஷ்பா டெல்லியில் வழக்கறிஞர் ராமசாமியை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர்.

சசிகலா புஷ்பா மீது 2-வது கணவர் புகார்
இந்நிலையில் 2-வது கணவர் ராமசாமி சென்னை போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் மதுரையில் இருந்து சென்னை வீட்டுக்கு தாம் திரும்பிய போது, ஒரு படுக்கை அறையில் சசிகலா புஷ்பா இருந்தார். மற்றொரு படுக்கையில் மர்ம நபர் இருந்தார். அதேபோல் அமுதா என்ற பெண்ணும் இருந்தார். வீடு முழுவதும் மதுவாசனை வீசியது; உணவு பொட்டலங்கள் சிதறிக் கிடந்தன. சட்டவிரோதமாக வீட்டுக்குள் மர்ம நபர்களை அனுமதித்துள்ள சசிகலா புஷ்பா மற்றும் இதனை தட்டிகேட்டதால் மிரட்டிய தஞ்சாவூர் ராஜா, அமுதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சசிகலா புஷ்பா மீது வழக்கு பதிவு
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் சசிகலா புஷ்பா, தஞ்சாவூர் ராஜா, அமுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2-வது கணவர் ராமசாமியின் இந்த புகார்கள் குறித்து சசிகலா புஷ்பா இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications