டிரஸ்ஸே இல்லாமல் ரோட்டில் சென்ற இளம்பெண்.. ஓடிசென்று துணியை போர்த்தி உதவிய போலீஸ்.. சென்னையில் ஷாக்!

சென்னையில் ஆடையின்றி நடந்து சென்ற பெண் மீட்கப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் நள்ளிரவில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண்

    சென்னை: உடம்பில் டிரஸ் இன்றி.. சென்னை ரோட்டில் இளம்பெண் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் இரவு நேரம் என்றாலும் மக்கள் நடமாட்டம் ஆங்காங்கே இருக்கும்.. இந்த பகுதியில் போலீசாரும் எந்நேரமும் விழிப்புடன் தீவிர கண்காணிப்பிலேயே பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.

    chennai Police rescued the young girl who was walking without dress

    இந்நிலையில் சம்பவத்தன்று, புதுக்கல்லூரி அருகே விடிகாலை 3 மணிக்கு ஒரு இளம்பெண் நடந்து சென்றுள்ளார்.. உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. வயது 20 இருக்கும்.. ஆடையின்றி நடந்து செல்லும் அந்த பெண்ணை பொதுமக்களும், போலீசாரும் பார்த்து உறைந்தனர்.

    உடனடியாக கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து தகவல் சொன்னார்கள்.. அதன்படி ராயப்பேட்டை உதவி ஆய்வாளர் ஜெயராமன் விரைந்து வந்தார்.. கையில் கொண்டுவந்திருந்த துணியை எடுத்து நடந்து வந்த இளம்பெண்ணுக்கு போர்த்திவிட்டார்.

    அதன்பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.. ஆனால் அந்த பெண் தெலுங்கில் பேசி உள்ளார்.. தமிழ் உட்பட எந்த மொழியும் தெரியவில்லை.. கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணான பதில்கள் வந்துள்ளன.. கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் பேசினாராம்.. விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே வயிறு வலிக்கிறது என்று சொல்லி அழ ஆரம்பித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.. சிகிச்சை நடப்பதால், பாதுகாப்புக்காக அரசு பெண்கள் காப்பக நிர்வாகிகள் அந்த பெண்ணுடனேயே தங்கி உள்ளனர்... இதையடுத்து மருத்துவ பரிசோதனையும் நடக்கிறது.

    இந்த சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மொழி தெரியாத மாநிலத்தில் 20 வயது பெண் எதற்காக.. இந்த நேரத்தில்.. இந்த கோலத்தில் வரவேண்டும்? யாராவது கடத்தி வந்தார்களா? பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்ற பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.. அந்த பெண் நடந்து வந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை கொண்டும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+