எலிக்கு என்ன திமிர் பாருங்க.. 19 கிலோ கஞ்சாவை தின்றுவிட்டதாம்.. சென்னை போலீஸ் பதிலால் நீதிபதி ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூன்று பெண்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேட்டு நீதிபதியே அதிர்ச்சியடைந்துவிட்டார்.

தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இதை மறுக்கும் தமிழக போலீசார், ஆங்காங்கே நடக்கும் கஞ்சா கடத்தலையும் கூட போலீசார் பிடித்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழலில் சென்னையில் கஞ்சா வைத்திருந்ததாகப் பிடிக்கப்பட்ட மூன்று பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா என்ன ஆனது என்பதற்கு போலீசார் கொடுத்த விளக்கம் தான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

30 கிலோ கஞ்சா

30 கிலோ கஞ்சா

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்துள்ளனர். முதலாம் நடைமேடையில் நின்று கொண்டிருந்த அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த சிஎம்பிடி போலீசார், அவர்களைப் பரிசோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்து சுமார் 30 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அந்த மூன்று பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.

கைது

கைது

கஞ்சா வைத்திருந்த அந்த மூன்று பேரில் ஒருவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான கல்பனா, மற்ற இருவர் ஆந்திர விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நாகமணி (30), குமாரி (21) என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 2018 ஆக.26ஆம் தேதி சென்னையில் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணை

விசாரணை

இந்த வழக்கை நீதிபதி ஜூலியட் புஷ்பா விசாரித்து வந்தார். இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பெண்கள் மீதும் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களையும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். போலீசார் தங்கள் முதல் தகவல் அறிக்கையில், இந்த மூன்று பெண்களிடம் இருந்து மொத்தம் 30 கிலோ கஞ்சாவை கைப்பற்றி இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

19 கிலோ மாயம்

19 கிலோ மாயம்

வழக்கு விசாரணையில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "30 கிலோ கஞ்சாவை கைப்பற்றியதாகக் கூறியுள்ளனர். ஆனால் 11 கிலோவைத் தான் போலீசார் காட்டியுள்ளனர். மீதி 19 கிலோ கஞ்சா மாயமாகியுள்ளது. மேலும், கஞ்சாவை பறிமுதல் செய்து 31 நாட்களுக்குப் பின்னரே அதை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இது போலீசாரின் விசாரணையில் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது" என்று வாதிட்டார்.

எலிகள்

எலிகள்

இதற்கு போலீசார் தரப்பில், "மூன்று பெண்களிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சா போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து இருந்ததால்.. மழையால் பாதிக்கப்பட்டும், எலிகள் கடித்ததாலும் கஞ்சா அளவு குறைந்துவிட்டது" என்று கூறப்பட்டது. எலி சாப்பிட்டதால் கஞ்சா மாயமானதாக போலீசார் கூறியதைக் கேட்டு நீதிபதி அதிர்ச்சியடைந்தார்.

விடுதலை

விடுதலை

மேலும், மூன்று பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டை போலீசாரால் சந்தேகத்திற்கு இடமின்றி போலீசார் நிரூபிக்க முடியவில்லை என்றார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடையையும் குறைந்துள்ளது இதன் காரணமாகக் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பெண்களையும் விடுதலை செய்து நீதிபதி ஜூலியட் புஷ்பா தீர்ப்பு அளித்தார். போலீசார் அலட்சியமாகச் செயல்பட்டதால் கஞ்சா வழக்கில் மூன்று பெண்கள் தப்பியுள்ளனர்.

581 கிலோ

581 கிலோ

அதேநேரம் இதுபோல கஞ்சாவை எலி கடித்துவிட்டது என்று போலீசார் சொல்வது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே, கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்போது போலீசார் கடத்தல்காரர்களிடம் இருந்து மொத்தம் 581 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்திருந்தனர். இருப்பினும், வழக்கு விசாரணையில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியவில்லை. நீதிபதி கேட்டதற்கு எலிகள் தின்று விட்டதாகத் தெரிவித்தனர். உபியில் நடந்த சம்பவம் இப்போது சென்னையிலும் நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+