வாடகை ஆட்டோ, கால் டாக்சியில் போறீங்களா.. இந்த "நம்பரை" நோட் பண்ணுங்க.. சென்னை போலீஸ் முக்கிய உத்தரவு
சென்னை: பொது சேவை வாகனங்களில் செல்வோருக்கு முக்கிய அறிவுறுத்தலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.. கால்டாக்சி மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்யும்போது, கட்டாயம் இந்த விஷயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அட்வைஸ் தரப்பட்டுள்ளது.
வாகன விபத்துக்கள் ஏற்படாதவாறு தடுக்கும்வண்ணம், நம் போலீசார் பல்வேறு அதிரடிகளை கையில் எடுத்து வருகிறார்கள்.. இதற்காகவே, வாகன சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அதிலும், வாரஇறுதி நாட்களில், குறிப்பாக, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞயிறுகளில் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்கள் யாரென்று கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
போக்குவரத்து போலீசார்: போக்குவரத்து விதிமீறலில் யார் ஈடுபட்டிருந்தாலும் சரி, சிசிடிவி கேமராவை வைத்தே அந்த நபர்கள் சிக்க வைக்கப்படுகிறார்கள்.. நம்பர் பிளேட் தெரியும் வகையில் வாகனத்தின் போட்டோ, அந்த போட்டோ எடுக்கப்பட்ட இடம் நேரத்தை சொன்னாலே போதும், சிசிடிவியை ஆராய்ந்து உடனே ஆக்ஷனை எடுக்கப்படுகிறது.. அபராதம் கட்ட சொல்லி சம்பந்தப்பட்ட நபருக்கு செல்போனுக்கே மெசேஜ் பறந்துவிடும்.
இந்த வசதி உள்ளதால், சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து, பொதுமக்களே தினமும் புகார்களை தந்து வருகிறார்கள்.. அதாவது, நம்பர் பிளேட், நேரம், நாள், இடம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு டேக் செய்தாலே போதும்.. சிசிடிவி உதவியுடன் போலீசார் குறிப்பிட்ட அந்த நபர்களுக்கு அபராதம் விதிப்பார்கள். இப்படி பல விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அறிவுறுத்தலை சென்னை போலீசார் வழங்கி உள்ளனர்.
என்ன காரணம்: சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி பொதுமக்களிடையே போதை பொருட்கள் உபயோகம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.. அப்போது, பொது சேவை வாகனங்களான கால்டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் பயணியர், தங்கள் பயணிக்கும் வாகன எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரி சொல்லும்போது, சென்னையை சுற்றிப்பார்க்க தினமும் வெளியூர்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வருகிறார்கள்.. அப்படி வருபவர்கள், இங்குள்ள பொதுசேவை வாகனங்களை உபயோகம் செய்யும்போது, மறதியாக உடமைகளையும் தவறவிட்டுவிடுகின்றனர்.

தங்கள் பயணித்த வாகனத்தின் நம்பரை தெரிந்து வைத்திருந்தால், விரைந்து அவர்களது உடமைகளை கண்டுபிடித்து ஒப்படைக்க உதவியாக இருக்கும்.. அதற்காகவே, இந்த விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.
சில்மிஷம்: தவற விடும் பொருட்களை மீட்டு தருவதற்கு மட்டுமின்றி, சில்மிஷத்தில் ஈடுபடுவது, பணத்தை பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க உதவும் என்று போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள். காவல்துறையின் இந்த உத்தரவானது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications