நடவடிக்கை எடுக்காதது ஏன்?.. பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை.. அடுத்தடுத்த சம்மன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாணவிகள் புகார்கள் அளித்தும் ஆசிரியர் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தற்போது பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை அளித்துள்ளது.

இது தொடர்பாக இணையத்தில் அடுக்கடுக்காக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அங்கு படித்த மாணவிகள் பலர் இணையத்தில் புகார்களை வைத்து வருகிறார்கள்.

புகார்

புகார்

இந்த நிலையில் பத்மசேஷாத்ரி பள்ளி மாணவிகள் இந்த பாலியல் தொல்லை தொடர்பாக ஏற்கனவே புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளியின் தாளாளரிடம் ஏற்கனவே இது தொடர்பாக புகார் அளித்தும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. ராஜகோபால் குறித்து பலர் புகார் அளித்துள்ளனர்.

 ஆனால்

ஆனால்

ஆனால் மாணவிகள் புகார் கண்டுகொள்ளப்படவில்லை. மாறாக தொடர்ந்து ராஜகோபாலுக்கு ஆதரவாக பள்ளி நிர்வாகம் செயல்பட்டுள்ளது. அதோடு புகார் கொடுத்த மாணவிகள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவிகள் பலர் இணையத்தில் தங்கள் புகார்களை வெளிப்படுத்தி இருந்தனர். பள்ளி நிர்வாகம் எங்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாணவிகள் பலர் குறிப்பிட்டு இருந்தனர்.

மாணவிகள் புகார்

மாணவிகள் புகார்

இந்த நிலையில் மாணவிகள் புகார்கள் அளித்தும் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தற்போது பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடவடிக்கை எடுக்காமல், ஆசிரியரை தொடர்ந்து கிளாஸ் எடுக்க விட்டது ஏன் என்று அசோக் நகர் பெண்கள் காவல்நிலையம் சார்பாக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

சம்மன்

சம்மன்

சம்மனுக்கு உடனே பதில் அளிக்க வேண்டும் என்று பத்மசேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளிடம் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி முதல்வர், நிர்வாகி, தமிழக முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் சார்பாக இன்னொரு சம்மனும் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+