லண்டன் மாதிரி ஆகுது சிங்கார சென்னை.. எங்கே போனாலும் பின் தொடருமாம் 3வது கண்!
Recommended Video
சென்னை: சென்னை சிட்டியின் போலீஸ் கமிஷனராக இருப்பவர் ஏ.கே.விஸ்வநாதன். இந்தப் பதவிக்கு அவர் வந்தமர்ந்து கணிசமான மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் ஸ்திரமாக அதில் அமர்ந்திருக்கிறார். ஏ.கே.விஸ்வநாதனின் திறமை மட்டுமல்ல எளிமையும் இதற்கு ஒரு காரணம் என்பார்கள் சக காவல்துறை அதிகாரிகள்.
1990-ம் ஆண்டு பேட்ச் காவல்துறை அதிகாரியான அவர் நக்சல் தடுப்பு, கள்ளச்சாராய வேட்டை, கோயமுத்தூர் குண்டு வெடிப்பு வழக்கு, உளவுத்துறை பணி என தில்லான ப்ராஜெக்ட்களில் கில்லியாக செயல்பட்ட அனுபவம் மிக்கவர் என்கிறார்கள்.
இதையெல்லாம் தாண்டி ஆளும் தரப்பிற்கும் அவரது பர்ஃபார்மென்ஸ் பிடித்திருப்பதால் சிறப்பாய் தொடர்கிறது கமிஷனர் விஸ்வநாதனின் பணி சமீபத்தில் கூட 'சிறந்த ஆளுமை' க்கான விருதையும் முதல்வரிடம் பெற்றுள்ளார்.

சென்னை மூன்றாவது கண்
இந்த நிலையில் சென்னை முழுக்க ‘மூன்றாவது கண்' எனும் பெயரில் ரெண்டரை லட்சம் சி.சி.டி.வி. கேமராக்களை வைத்து போலீஸ் கண்காணித்துக் கொண்டிருப்பதை இந்த நேரத்தில் குறிப்பிட வேண்டும். இந்த வசதியின் மூலம் குற்றம் செய்துவிட்டு எஸ்கேப் ஆகும் நபர்களை விரைந்து பிடிப்பது சுலபமாகி இருக்கிறது. அதன் பிறகு அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுவதும், அவர்களின் கை கால்களில் தமிழக காவல்துறை சார்பாக சிறப்பு மாவுக்கட்டு போடப்படுவதும் தனிக்கதை.

கண்காணிக்கிறது கேமரா
எப்போதுமே கேமரா கண்காணிக்கிறது என்பதால் சென்னை சிட்டியில் குற்றச்செயல்கள் கணிசமாக குறைந்துள்ளது! என்று பெருமையாக குறிப்பிட்டுக் கொள்கின்றனர் இந்த சிட்டியின் போலீஸ் அதிகாரிகள். 'சம்பவத்தை பண்ணினால், கேமராவில் சிக்குவோம்' என்று கிரிமினல்கள் பயப்படுகிறார்களாம். இது மிகைப்படுத்தப்படாத உண்மையும் கூட.

கமிஷனர் பெருமை
இப்படி மூன்றாவது கண் சென்னையை கண்காணித்துக் கொண்டே இருப்பது பற்றி பெருமையாக பேசும் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் "லண்டனில் ஒரு நபர் வீட்டை விட்டு வெளியே வந்து மீண்டும் வீட்டுக்குள் செல்வது வரை எல்லா காட்சிகளும் ரெக்கார்டு செய்யப்பட்டுவிடும். தற்போது அது போலத்தான் சென்னையும் உருமாறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வீதிகள் என எங்கும் இந்த மூன்றாவது கண் திறக்கப்படும். இது தவிர சென்னையின் அனைத்து நுழைவாயில்களிலும் இப்படி மூன்றாவது கண்கள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

ஒளிவு மறைவே இல்லாமல்
கிரிமினல் நடவடிக்கைகளை அறவே ஒழிப்பது, சாலை விபத்துக்களை தவிர்ப்பது, விபத்து நடந்த சில நொடிகளிலேயே சென்று உயிர்காப்பது, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு என எல்லா விதத்திலும் சென்னை மேம்பட்டு விளங்கப்போகும் காலம் மிக விரைவில்." என்றிருக்கிறார் பெருமையாக. அப்படின்னா சென்னையில் அம்மாம் பெரிய நடிகர் ரஜினி முதல் கிராமத்துல இருந்து படிப்புக்கு வர்றவங்க வரைக்கும் எல்லாருடைய நடவடிக்கைகளும் எங்கே போறாங்க, எப்ப வர்றாங்கன்னு ஒளிவு மறைவே இல்லாமல் பதிவாகும்னு சொல்லுங்க.
கேமரா கண்காணிப்பில் மட்டுமில்லாமல் சுத்தத்திலேயும் நம்ம சென்னையை லண்டன் மாதிரியே ஆக்கிடுங்க சார். புண்ணியமாகப் போகும்!
- ஜி.தாமிரா
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications