மன்சூர் அலிகான் விவகாரம்... போலீசிடம் இருந்து நடிகை திரிஷாவுக்கு பறந்துபோன முக்கிய கடிதம்! பின்னணி
சென்னை: நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் திரிஷாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் லியோ. இந்த படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்பட நடிகர், நடிகர்கள் நடித்துள்ளனர்.

திரைப்பட வாய்ப்பு இன்றி இருந்த மன்சூர் அலிகானுக்கு மீண்டும் லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் அளித்த ஒரு பேட்டியில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அதாவது "லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை" என பொருள்படும்படி அவர் கூறியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பியது. இதற்கு நடிகை திரிஷா கடும் கண்டனத்தை பதிவு செய்தார். அதோடு மன்சூர் அலிகான் உடன் இனி நடிக்கப்போவது இல்லை என அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்பட பல திரைப்பட நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்தினர். ஆனால் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரவில்லை. இதையடுத்து இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றது. சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் சார்பில் சென்னை போலீசாருக்கு உத்தரவு வந்தது.
இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர் அலிகான் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பிய போலீசார் அவரை நேரில் வரவழைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தான் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை சார்பில் நடிகை த்ரிஷாவுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
அதாவது மன்சூர் அலிகான் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நடிகை திரிஷா அளிக்கும் விளக்கத்தை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது பாயும் என கூறப்படுகிறது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதனையும் மன்சூர் அலிகான் சமீபத்திய பேட்டியில் மறுத்தார். அதாவது தான் மரணித்துவிடு என தான் கூறியது மன்னித்துவிடு என தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளதாக கூறி விவாதத்தை கிளப்பி இருந்தார். இந்நிலையில் தான் தற்போது திரிஷாவிடம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர்.
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications