இதுதான் நம்ம தமிழ்நாடு.. 2வது நாளும் பூந்தமல்லி.. மசூதியில் யார் பாருங்க.. புயலை "சாய்த்த" பள்ளிவாசல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2015ஐ போலவே, சென்னையின் சாலைகளில் கடல் போல தேங்கிகிடக்கும் தண்ணீரை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் சென்னைவாசிகள்... இப்படியான நெருக்கடி நேரத்தில், சென்னை பூந்தமல்லி பள்ளிவாசல், 2வது நாளும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..

சென்னையை ஒரு புரட்டு புரட்டிபோட்டுவிட்டு போய்விட்டது இந்த நிக்ஜாம்.. ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள், நீரில் மூழ்கிவிட்டன.. வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும், தண்ணீரில் அடித்து செல்வதை கலங்கிப்போய் பார்த்து கொண்டு நின்றனர் அதன் உரிமையாளர்கள். தண்ணீர் புகுந்து ஆயிரக்கணக்கான பைக்குகள், கார்கள் சேதமாகி உள்ளன..

அடைமழை: அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள் என பாரபட்சமின்றி வெள்ள நீர் புகுந்து நிரம்பியுள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையே கிட்டத்தட்ட ஒரு தீவு போலவே ஆகிவிட்டது..

Chennai Poonamallee Chennai Poonamallee open for shelter and Chennai michaung Cyclone Rain

ஒரு ஏரியாவில் இருந்து இன்னொரு ஏரியாவுக்கு செல்ல முடியாத அளவுக்கு இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. இந்த தண்ணீரில் நின்றுகொண்டுதான், பொளந்து கட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், திமுக அரசு தீவிரப்பணிகளை மேற்கொண்டுள்ளது.

முறிந்த மரங்கள்: முறிந்து விழுந்த மரங்கள் ஒருபக்கம், பலத்த காற்று மறுபக்கம் என கொட்டும் மழைக்கு நடுவில், மாநகராட்சி ஊழியர்களின் பணிகள் பாராட்டத்தக்கவை.. இடைவிடாமல் மழை பெய்து வருவதால், நிவாரண பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது என்றாலும், தமிழக அரசு தொடர்ந்து களப்பணிகளில் நேற்று முன்தினம் முதலே ஈடுபட்டு வருகிறது.. சென்னையையும் திரும்ப மீட்டு கொண்டிருக்கிறது.

எப்போதுமே சென்னையை பொறுத்தவரை, தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் புகுந்துவிடும். ஆனால், இந்த முறை, மேடான பகுதிகளிலும் சேர்த்தே மழைநீர் புகுந்துவிட்டது. இதனால், பாதுகாப்பான இடங்களை தேடி செல்லும் நிலைமை ஏற்பட்டது.

நிவாரண முகாம்கள்: நிவாரண முகாம்களை அரசு ஏற்படுத்தியிருந்தாலும், அந்த நிவாரண முகாம்களுக்கு செல்வதற்குகூட, முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், இஸ்லாமியர்கள் செய்த காரியம், புல்லரிக்க வைத்துவிட்டது. அதுவும் பூந்தமல்லி பள்ளிவாசல், சோஷியல் மீடியாவில் அறிவிப்பையே செய்துவிட்டது. இது தொடர்பாக அந்த பள்ளிவாசலின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதாவது:

"அஸ்ஸலாமு அலைக்கும் நமது பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் இன்று மிக்ஜாம் புயலால் மழை அதிகமாக பெய்து வருவதால் பூவிருந்தவல்லி பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களும் பள்ளியில் தண்ணீர் பிடிக்கலாம், மொபைல் மற்றும் ஜார்ஜ் லைட் போன்ற சாதனங்களுக்கு ஜார்ஜ் செய்து கொள்ளலாம். மழை அதிகமாக இருப்பதால் வீட்டிற்குள் மழைநீர் வந்தவர்கள் பள்ளியில் தங்கலாம்.. அன்புடன் அழைப்பு கொடுக்கப்படுகிறது. பள்ளி தொழுகைக்கு மட்டும் அல்ல" என பதிவிட்டது.

அறிவிப்பு: "அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பள்ளி தொழுகைக்கு மட்டும் அல்ல" " என்ற இந்த அறிவிப்பானது, காண்போரை நெகிழ வைத்தது.. உருக வைத்தது.. சிலிர்க்க வைத்தது!!

இப்படி ஒரு அறிவிப்பை பார்த்ததுமே, தங்குவதற்கு இடமின்றி அவதிப்பட்ட அனைத்து மதங்களை சேர்ந்தவர்களுமே, மசூதிக்குள் திரண்டனர்... அவர்களுக்கு வயிறார உணவு தரப்பட்டது.. இதேபோல் சென்னை பாலவாக்கம் மசூதியிலும் அனைத்து சமுதாய மக்கள் தங்க வரலாம் என்று அழைப்பு விடுத்திருந்தனர்.

150 கிலோ அரிசி: மேலும், அனைத்து சமுதாய மக்களுக்கும் இன்று உணவு ஏற்பாடு நடக்கிறது, 150 கிலோ அரிசி கொண்டு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆபத்து நேரத்திலும் பயன்படுத்தப்படும்... எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்ற பதிவுகளும் பறந்தன..

அதுபோலவே, சென்னை லயோலா கல்லூரியின் கதவுகளும் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு உணவும் தயார் செய்து தரப்படுகிறது.. மற்றொருபுறம் லயோலா காலேஜ் ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவர்கள், தங்களது உடைகளை, மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறார்கள். இந்த சம்பவங்கள் எல்லாமே மனித மனங்களை நெகிழ செய்து வருகிறது.
மனித பிறப்பின் அருமையையும், அதன் உன்னதத்தையும், இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் ஒவ்வொருமுறையும் நமக்கு உணர்த்திவிட்டு செல்கின்றன..

இடர்பாடுகள்: எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும் ஒரு சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதநேயமும், ஈரம் கசியும் உள்ளங்களும் இங்கு இருக்கும்வரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த "சகோதர உறவுகள்" நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன... அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்.. !!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+