ஆஹா.. இவரல்லவோ மனிதர்... பூந்தமல்லியே பூரிக்குதே.. சென்னையை கிறுகிறுக்க விட்ட ஜூஸ் கடைக்காரர்.. சபாஷ்
சென்னை: பூந்தமல்லி சிவக்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.. என்ன காரணம்? யாரிந்த சிவக்குமார் தெரியுமா?
சமீபகாலமாகவே சோஷியல் மீடியாவில் பல்வேறு சம்பவங்களின் வீடியோக்கள் வலம் வருவது அதிகரித்துவிட்டது.. வினோதமான, அல்லது சுவாரஸ்யமான அல்லது இதயத்தை உலுக்கக்கூடிய அல்லது இதயத்தை உருக்கக்கூடிய பல நிகழ்வுகளின் காட்சிகளாக வலம் வரும்.

இணையவாசிகள்: சில சமயம் அச்சடித்து ஒட்டப்படும் போஸ்டர்களும் இணையவாசிகளை அவ்வப்போது கவர்ந்துவிடக்கூடும்.. முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி, வித்தியாசமான போஸ்டர்கள், பேனர்கள் மக்களை கவரக்கூடும்.. அப்படித்தான், சென்னையிலுள்ள சிவக்குமார் நம்மையெல்லாம் அசரடித்துள்ளார்..
பூந்தமல்லியைச் சேர்ந்தவர் சிவகுமார்-. 42 வயதாகிறது.. இவர் பூந்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தள்ளு வண்டியில் கற்றாழை ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார்... இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.. தினமும் தண்ணி இல்லாமல் இருக்க மாட்டாராம். இவரது நண்பருடன் சேர்ந்துதான் தினமும் தண்ணி அடிப்பாராம். 2 பேருமே குடிப்போதைக்கு ஆளாகியிருக்கிறார்கள்..
சிவக்குமார்: இவர்களது குடியை நிப்பாட்ட, குடும்பத்தினர் எவ்வளவோ முயற்சி எடுத்தனர்.. ஆனாலும் இருவருமே அளவுகடந்து குடித்து வந்திருக்கிறார்கள்.. ஒருநாள் திடீரென இவர்களுக்குள் ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. மது குடிப்பதை யார் முதலில் நிறுத்துவது? என்ற போட்டி எழுந்துள்ளது. அதன்படி, இருவருமே சவாலை ஏற்று நடந்தனர். இதில் சிவக்குமார் குடிக்காமல் 100 நாட்களை கடந்து விட்டாராம்..
ஆனால், அவரது நண்பரோ, பந்தயத்தில் தோற்று விட்டார்... 100 நாட்கள் குடிக்காமல் இருப்பதை பார்த்து சிவக்குமாருக்கே தன் மீது ஆச்சரியமாகிவிட்டதாம்.. அதனால், இந்த சந்தோஷத்தை அவரால் தாங்கவே முடியவில்லை.
பேனர்: எப்படியாவது இந்த 100 நாளை கொண்டாட நினைத்தார். இதற்காக பெரிய பேனர் ஒன்றை தயார் செய்து, தன்னுடைய கடைக்கு முன்பு வைத்தார்.. அதில் தன்னுடைய போட்டோவை பெரிய சைஸில் வைத்து, "வெற்றிகரமாக 100 நாட்கள் மது அருந்தவில்லை, எந்த நேரத்திலும் நிறம் மாறாத பூ நட்பு" என அச்சிட்டுள்ளார்..
இதுகுறித்து சிவகுமார் சொல்லும்போது, "எனக்கும், நண்பருக்கும் மது குடிக்காமல் இருக்க வேண்டும் என்று போட்டி எழுந்தது.. நான் 100 நாட்கள் குடிக்கவில்லை. அதனை கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன். நானே என்னை வாழ்த்தி பேனர் வைத்துக் கொண்டேன். தினமும் தண்ணி அடிக்கும் பணத்தை சேமித்து வைத்தேன்.. ரூ.80 ஆயிரம் கடனையும் அடைத்துவிட்டேன்.. இப்போது உடல் நலத்துடன் இருக்கிறேன். எல்லாரும் எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள்" என்று பூரிக்கிறார்.
வாழ்த்துக்கள்: தன்னை தானே வாழ்த்திக்கொண்டு சிவக்குமார் வைத்துள்ளதுதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பூந்தமல்லி மக்களும் சிவக்குமாருக்கு பாராட்டை சொல்லி கொண்டிருக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications