சென்னையில் தூக்கத்தை கெடுக்கும் பவர் கட்! AC இல்லாதவர்களும் கரண்ட் பில்லை குறைக்க 10 சூப்பர் டிப்ஸ்
சென்னை: தமிழகத்தில் கோடை காலம் அதன் உக்கிரத்தை இப்போதே காட்ட தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் நள்ளிரவு மின்தடை என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதை எப்படி சமாளிப்பது? வெயிலுக்காக மின்சாரத்தை அதிகப்படுத்துவதால் கரண்ட் பில்லும் எகிறிவிடுகிறது, இதை எப்படி கட்டுப்படுத்துவது? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சென்னையில் தரைக்கு அடியில் கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டாலும், புறநகர் பகுதிகளில் மின் கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் மூலமே மின்சாரம் வழங்கப்படுகிறது.

மின் நுகர்வு உச்சம்
இப்போது மின் நுகர்வு உச்சத்தை தொட்டுள்ளதால், மின் சாதனங்களில் ஏற்படும் ஓவர்லோடு காரணமாக பழுது ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.. குறிப்பாக சமையல் கேஸ் சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல் முதல் வீடுகள் வரை பலரும் மின்சார அடுப்புக்கு மாறியுள்ளனர்.. இது மின் தேவையை மேலும் அதிகரித்துள்ளது..
சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், கிராண்ட்லைன், இந்திரா நகர், மாதவரம், அழிஞ்சிவாக்கம், வடகரை மற்றும் மாதவரம் நெடுஞ்சாலை சுற்றுவட்டாரங்களில் இப்போதே அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.. திருவொற்றியூர் மாணிக்கம் நகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி காயரம்பேடு போன்ற இடங்களிலும் நள்ளிரவில் 3 முறைக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவிக்கும் சூழல் துவங்கி உள்ளதாம்.
மின்வாரிய அதிகாரிகள்
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், பழுதுகளை சரிசெய்ய தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.. இருந்தாலும், நள்ளிரவு 9 மணிக்கு மேல் தொடங்கும் மின்தடை ஒரு மணி நேரத்திற்குள் சரியாகாததால் மக்கள் கடும் புழுக்கத்தில் அவதிப்படுகின்றனர்..
மின்சார செலவை குறைக்க ஏசி, பேன் பயன்பாடு அதிகம் இருக்கும் இந்த சூழலில், ஹீட்டர், தலை காயவைக்கும் டிரையர் போன்றவற்றை தவிர்க்கலாம்.. வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்துவிட்டு, டிரையர் பயன்படுத்தாமல் இந்த வெயிலிலேயே காயவிடலாம். இது மின்சார பில்லை குறைக்க உதவும்.
24 டிகிரி அல்லது 26 டிகிரி
அதேபோல் ஏசி வெப்பநிலையை எப்போதும் 24 டிகிரி அல்லது 26 டிகிரியில் வைப்பது மிகச்சிறந்த முறையாகும்.. நாம் அவசரத்திற்கு 16 அல்லது 18 டிகிரியில் வைப்பதால் மட்டுமே, ரூம் சீக்கிரம் ஜில்லென்று ஆகிவிடாது.. 24 டிகிரியில் ஏசியை வைத்துவிட்டு, அதேசமயம் ரூமிலுள்ள ஃபேனையும் ) மெதுவான வேகத்தில் ஓடவிட்டால், குளிர்ந்த காற்று அறை முழுவதும் சீராக பரவும்.
நம்முடைய நாட்டில் AC பயன்படுத்துவோரில் 50 சதவீதம் 24 டிகிரி செல்லியஸ் என்ற அளவை பின்பற்றினால், ஆண்டுக்கு 1000 கோடி யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இது ரூ.5,000 கோடி அளவுக்கு சேமிப்பை ஏற்படுத்தும். மேலும், ஆண்டுக்கு 8.2 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தையும் குறைக்குமாம்.
ஃபேன், விளக்குகள், வாஷிங் மெஷின்
அதேபோல், வீடுகளில் இயற்கை காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்தை பயன்படுத்தி பகல் நேர மின்விளக்குகளைத் தவிர்க்க வேண்டும்.. ஃபேன் விளக்குகள் தேவையில்லாத போது அணைப்பதுடன், டிரையருக்கு பதிலாக வெயிலில் துணிகளை உலர்த்துவது மற்றும் ஹீட்டரை தேவைப்படும் போது மட்டும் இயக்குவது மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.
கடைகள் மற்றும் அலுவலகங்களில் தேவையற்ற விளக்குகளைத் தவிர்த்துவிட்டு, ஆற்றல் சேமிப்பு கொண்ட சிறிய ஃப்ளோரசன்ட் விளக்குகளையும், வர்ணம் பூசப்பட்ட சைன்போர்டுகளையும் பயன்படுத்துவதன் மூலம் மின் நுகர்வை பெருமளவு குறைக்க முடியும்.. இத்தகைய எளிய முறைகளைப் பின்பற்றுவது பணத்தையும் மின்சாரத்தையும் சேமிக்க வழிவகுக்கும்..












Click it and Unblock the Notifications