சென்னை மக்களே நோட் பண்ணுங்க.. மே 31ல் பெருங்களத்தூர் + நந்தம்பாக்கம் உள்பட பல இடங்களில் மின்தடை
சென்னை: மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் பெருங்களத்தூர், முடிச்சூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்களின் சில இடங்களில் நாளை மறுநாள் (மே 31)ம் தேதி சில இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கத்தில் மாதம் ஒருமுறை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி நடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்.
அந்த வகையில் சென்னையில் வரும் மே 31ம் தேதி சில இடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

சென்னையில் மே 31ம் தேதி (நாளை மறுநாள்) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக பெருங்களத்தூர், முடிச்சூர், நந்தம்பாக்கம், மாதம்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்களில் உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. மதியம் 2 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மீண்டும் மின் இணைப்பு வந்து விடும்.
பெருங்களத்தூர்: காந்தி நகர், கிருஷ்ணா ரோடு, முத்துவேளாளர் ரோடு, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர், ஜிஎஸ்டி ரோட்டின் ஒரு பகுதி (எரணியம்மன் கோவிலுக்கு பின்புறம்) ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
முடிச்சூர்: அமுதம் நகர், ஏஎன் காலனி, அஷ்டலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், விஎம் கார்டன் உள்ளிட்ட இடங்களில் மின்சப்ளை இருக்காது.
நந்தம்பாக்கம்: மணப்பாக்கம் மற்றும் கோலப்பாக்கம் ரோடு, காசா கிராண்டா கஸ்டர் மற்றுமு் வுட்சைட், கிரிகோரி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பெல் நகர், ஸ்ரீராம் கார்டன், மைக்ரோமார்வெல், தர்மராஜபுரம், பிபிசிஎல் பேஸ் I, II, வல்லிஸ்வரன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.
மாதம்பாக்கம்: படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்யா நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதனால் மேற்கூறிய இடங்களில் வசிக்கும் மக்கள் நாளை மறுநாள் காலை 9 மணிக்கே மின்சாதனங்களை வைத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்து விடுவது நல்லது.












Click it and Unblock the Notifications