எலி மருந்து நெடியால் சென்னையில் பலியான 2 குழந்தைகள்.. தனியார் நிறுவனத்துக்கு சீல்.. காரணம் இதுதான்
சென்னை: சென்னை குன்றத்தூரில் வங்கி மேலாளர் வீட்டில் எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எலி மருந்து வழங்கிய தனியார் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி பகுதியில் வசிப்பவர் கிரிதரன் (வயது 34). இவர் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவது மனைவி பெயர் பவித்ரா. இந்த தம்பதிக்கு விஷாலினி(6) மற்றும் சாய் சுதர்சன் (1) என இரு குழந்தைகள் இருந்தனர்.

இவரது வீட்டில் எலி தொல்லை அதிகம் இருந்துள்ளது. இதனால் எலி மருந்து வைக்க அவர் முடிவு செய்தார். இதுதொடர்பாக சென்னை தி நகரில் உள்ள பெஸ்ட் கண்ட்ரோல் எனும் தனியார் நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்டார்.
அதன்பிறகு கடந்த 13ம் தேதி அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வீட்டுக்கு சென்று எலி மருந்து வைத்தனர். அப்போது எலி மருந்தின் நெடி என்பது அதிகம் வந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் எலி மருந்தின் நெடி குறைந்து விடும் என நினைத்து கிரிதரன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டில் கதவை பூட்டி தூங்கினார். அப்போது வீட்டு ஜன்னல், கதவுகள் என அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தது.
மறுநாள் காலை கிரிதரன் மனைவி பவித்ரா மற்றும் 2 குழந்தைகள் என அனைவரும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். குழந்தைகள் 2 பேரும் மயங்கினர். இதையடுத்து கிரிதரன் உள்பட நால்வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குழந்தைகள் விஷாலினி, சாய் சுதர்சன் ஆகியோர் பலியாகினர். கிரிதரன், பவித்ரா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபற்றி குன்றத்தூர் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அதிக வீரியம் கொண்ட எலி மருந்து வைத்ததால் அதில் இருந்து வந்த நெடி தாங்க முடியாமல் குழந்தைகள் 2 பேரும் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் கைது செய்தனர். மேலும் சென்னை தி நகரில் செயல்பட்டு வந்த எலி மருந்து வைக்கும் Pest Control அலுவலகத்தின் உரிமம் நேற்று ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு 2 நாட்களில் சீல் வைக்கப்படும் என்று வேளாண் துறை அதிகாரிகள் அறிவித்தனர். அதன்படி இன்று தி நகரில் செயல்பட்டு வந்த பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்துக்கு வேளாண் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications