Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யூடியூபர் இர்பான் சர்ச்சைக்கு நடுவே.. சென்னை மருத்துவமனை செய்ததை பாருங்க! சீல் வைப்பு - திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை வெளிநாட்டில் சென்று அறிந்துகொண்டு, அதை எல்லோருக்கும் அறிவித்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இந்த சர்ச்சைக்கு நடுவே சென்னையில் கருவில் இருந்த சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த புகாரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் பிரபல தனியார் மருத்துவமனைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து தெரிவிப்பது என்பது தடை செய்யப்பட்டு உள்ளது. முன்காலத்தில் கருவில் இருப்பது பெண் குழந்தைகள் என்றால் அதனை கலைப்பது போன்ற சம்பவங்கள் நடந்தன.

Chennai private hospital sealed by health officials after its finding out gender of baby which is in fetus

இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்தது. இதனை தடுக்கும் வகையில் தான் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை பரிசோதனைகள் மூலம் கண்டறிவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் மருத்துவமனை மற்றும் சம்பந்தப்பட்ட பெற்றோர் மீதும் நடவடிக்கை பாயும்.

இத்தகைய சூழலில் தான் சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் இர்பான் பிரச்சனையில் சிக்கினார். இவர் தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை வெளிநாட்டில் சென்று அறிந்துகொண்டு, அதை எல்லோருக்கும் அறிவித்து, அந்தக் கொண்டாட்டத்தையே வீடியோவாக வெளியிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை விசாரணையை தொடங்கியது. இதையடுத்து மன்னிப்பு கோரிய இர்பான் அந்த வீடியோவை டெலிட் செய்தார். இந்த பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை.

இதற்கிடையே தான் சென்னையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்ததாக கூறப்பட்ட புகாரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர். அதாவது சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை சார்பில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து முன்கூட்டியே தெரிவித்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்த புகார் பற்றி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது மருத்துவமனை விதிகளை மீறி செயல்பட்டதும், கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 06.01.2024 அன்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மற்றும் மருகளத்தூர் ரவி கிருஷ்ணா ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாநில அமலாக்க அலுவலர் & மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் இரா இளங்கோ மகேஸ்வரன் ஆணைப்படி இணை இயக்குநர் (சட்டம்) தலைமையில் இணை இயக்குநர் (குடும்ப நலம்) மற்றும் தேசிய சுகாதார திட்ட மாவட்ட மனநல மருத்துவர் ஆகியோரை கொண்டு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

விசாரணை குழுவினர் 02.05.2024 அன்று மேற்கொண்ட நேரடி ஆய்வில் மருத்துவமனையில் ஸ்கேன் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதும், உரிய அனுமதியின்றி ஸ்கேன் செய்ததும், மாதாந்திர அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பிக்காமல் இருந்ததும், கர்ப்பிணி பெண்களிடம் பெறக்கூடிய ஃபார்ம் - எஃப் முறையாக பராமரிக்கப்படாததும் கண்டறியப்பட்டது. மேற்காணும் குறைபாடுகளை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட அமலாக்க அலுவரால் பிசிபிஎன்டிசி சட்டம், 1994ன் கீழ் உரிய விளக்கம் கோரப்பட்டது. 17.05.2024 நாளிட்ட Cadence மருத்துவமனையின் விளக்க கடிதமானது குறைபாடுகளுக்கு தொடர்பில்லாமலும், திருப்தியின்றியும் அமைந்தது.

அதனை தொடர்ந்து விசாரணை குழுவானது 23.05.2024 அன்று Cadence மருத்துவமனையில் மீண்டும் நேரடி ஆய்வு மேற்கொண்டது. ஆய்வில் மருத்துவமனைி் நிர்வாகம் மேற்கொள்ள முறையான பணியாளர்கள் இல்லை என்பதும், தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் - 1997 சட்டத்தின் கீழ் உரிய அனுமதி பெறாமல் மருத்துவர்கள் பணியாற்றியதும், மேலும் உரிய அனுமதியின்றி கருக்கலைப்பு செய்வதும் மகளிர் நலன் மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் முறையான மகளிர் நலன் மற்றம் மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செய்யப்பட்டதும், அவசர காலங்களில் மயக்கவியல் நிபுணர், பொது நல மருத்துவர் மற்றும் அவசரகால மருத்துவர்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை மனநல பாதுகாப்பு சட்டம் - 2017 அத்தியாயம் 10, பிரிவு - 65 (1)ன் கீழ் மனநல மருத்துவம் அளிக்க மாநில மனநல அலுவலரிடம் முறையான அனுமதி பெறாமல் மனநல சிகிச்சை மேற்கொண்டது கண்டறியப்பட்டது. மேலும் மருத்துமவமனையில் போதுமான கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு இருப்பதும் கண்டறிப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 1997 விதி 5(1)ன் கீழ் பொதுமக்களின் நலன் கருதி Cadence மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட பதிவுச்சான்றிதழை தற்காலிகமாக நீக்கம் செய்து ஆணையிடப்பட்டது. இதையடுத்து மருத்துவமனை மூடப்பட்டது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+