பகலில் உல்லாசம்.. ரீல்ஸ் பிரபலத்தின் போட்டோவை காட்டி.. ஆண்களை சாய்த்த "ஆண்".. சென்னை போலீஸ் அதிரடி
சென்னை: ஆபாசமாக போட்டோ அனுப்ப வேண்டுமானால் ரூ.500, வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டுமானால் ரூ.800, தனியாக அறையில் உல்லாசமாக இருக்க வேண்டுமானால் ரூ.3000" என்ற மெசேஜ்ஜை பார்த்ததுமே, சென்னை போலீசார் அதிர்ந்து போனார்கள்.. என்ன நடந்தது?
சென்னையை சேர்ந்தவர் அந்த இளம்பெண்.. நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் பணியை செய்து வருபவர்.. இவர், அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை தந்திருந்தார்.

அதில், தன்னுடைய படத்தை பயன்படுத்தி, "பாலியல் தொழில் செய்யும் பெண்" என்று குறிப்பிட்டு, சிலர் சோஷியல் மீடியா மூலம் ஆண்களிடம் பணம் வசூலிப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதிரடி விசாரணை: உடனே போலீசாரும் இந்த புகாரின்பேரில், விசாரணையை துவங்கினர்.. சம்பந்தப்பட்ட சோஷியல் மீடியாவில் "சேட்" செய்தனர். அப்போது, ஒரு போலி ஐடியிலிருந்து, இளம்பெண்ணின் மெசேஜ் வந்தது..
அதில், "ஆபாசமாக போட்டோ அனுப்ப வேண்டும் என்றால் ரூ.500, வீடியோ காலில் நிர்வாணமாக வர வேண்டுமானால் ரூ.800, தனியாக அறையில் உல்லாசமாக இருக்க வேண்டுமானால் ரூ.3000" என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பணம் செலுத்துவதற்கான ஜிபே க்யூஆர் கோடை மெசஞ்சர் மூலமாகவும் அந்த பெண் அனுப்பி வைத்தார்..
பணப்பரிவர்த்தனை: உடனே போலீசார் இதனை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய உருவாக்கப்பட்ட வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்ட செல்போன் நம்பரை கண்டுபிடித்தனர்.. அந்த செல்போன் நம்பரை வைத்து, ஆபாசமாக சேட்டிங் செய்த நபர் யார்? எங்கிருக்கிறார் என்றும் ஆய்வு செய்தனர்..
இறுதியில், விழுப்புரம் மரக்காணம் பகுதியில் அந்த நபர் இருப்பதாக செல்போன் நெட்வொர்க் மூலம் தகவல் கிடைத்தது.. இதையடுத்து தனிப்படை போலீசார் மரக்காரணம் விரைந்து சென்றனர்.. அங்கே சென்றபிறகுதான், சேட்டிங்கில் ஆபாசமாக இளம்பெண்ணை போல பேசியது, கிருஷ்ணன் என்ற 26 வயது இளைஞர் என்பது தெரியவந்தது.
தனிப்படை போலீஸ்: இவர் ஹைதராபாத்தில் ஓட்டல் ஒன்றிலும், பிறகு புதுச்சேரியில் நகை கடை ஒன்றிலும் வேலை பார்த்துள்ளார்.. பள்ளிப்படிப்பை கூட முடிக்காத கிருஷ்ணன், செல்போனை ஆய்வு செய்வதில் வல்லவராம்..
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட போலி ஐடிகளை உருவாக்கி, ஏராளமான ஆண்களின் சபலத்தை பயன்படுத்தி மோசடி செய்து வந்துள்ளார்.. பெண் வீக்னஸ் இருக்கும் நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளாராம்..
விசாரணை: அவரது சமூக வலைதள கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அரைகுறை ஆடையோடு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட பெண்களின் போட்டோக்களையே பெரும்பாலும் பயன்படுத்தி போலி ஐடிக்களை உருவாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இப்போது கிருஷ்ணன் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.. இனிமேல்தான் அவரிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு, இவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்ற விவரங்களை அறிய போகிறார்களாம்.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட்












Click it and Unblock the Notifications