சென்னையே "ஆ"ன்னு பார்க்குதே.. இந்த மேடம் யார்னு பாருங்க.. இவங்கதான் புளியந்தோப்பு "சிறைப்பறவை"
சென்னை: சென்னை புளியந்தோப்பு பெண் ஒருவர் போலீசில் சிக்கி உள்ளார்.. இதுகுறித்து தகவல் பரபரப்பாகி வருகிறது.
தமிழகத்தில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த உடனடியாக அரசு முன்வரவேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியபடியே இருந்தன.
அந்தவகையில், தமிழக அரசும் கஞ்சா ஒழிப்பில் முனைப்பு காட்டியது. தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்..

ஆபரேஷன் கஞ்சா: அதுமட்டுமல்ல, தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை தயவுதாட்சண்யம் பாராமல் கைது செய்ய வேண்டும் என்று போதைபொருள் தடுப்பு விவகாரத்தில் டிஜிபிக்கு முழு சுதந்திரம் தந்து உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, "ஆபரேஷன் கஞ்சா" ஆரம்பமானது.. போலீசாரின் தீவிர வேட்டையும் அதிகமானது.
இறுதியில், போதைப்பொருள், கஞ்சா விற்பனை, உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் பலர் கைதானார்கள்.. தற்போது ஓரளவு போதைப்பொருள் விற்பனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.. இந்நிலையில், போலீசுக்கே போக்கு காட்டிக்கொண்டிருந்த, புளியந்தோப்பு பெண் மீண்டும் வசமாக சிக்கி உள்ளார்.
கஞ்சா விற்பனை: இந்த பெண்ணின் பெயர் வேலழகி.. சென்னை புளியந்தோப்பு கே.பி.ஹவுசிங்போர்டு பகுதியில் வசித்து வருகிறார்.. 63 வயதாகிறது.. இவருக்கு, கஞ்சா விற்பதை தவிர வேறு வேலை எதுவுமே கிடையாது.. இதற்கெனவே தனி டீம் வைத்திருக்கிறார்.. இவர்களை வைத்துதான், சென்னையில் கஞ்சாவை விற்பனை செய்து வந்தார்.. ஆந்திராவில் இருந்து ரயிலில், கஞ்சாவை கடத்தி வந்து, சிறு, சிறு பொட்டலங்களாக சென்னை முழுதும் புரோக்கர்கள் வாயிலாக விற்று வந்தார்.
போலீசாரின் பட்டியலில் "பி" பிரிவு ரவுடியாகவும் இருக்கிறார்.. இவர்மீது, சென்னை பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கஞ்சா வழக்கு உட்பட சுமார் 56 வழக்குகள் நிலுவையில் இருக்கிறதாம்.. போலீசார் இதுவரை இவர்மீது 55வது முறைக்கும் மேலாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.. எத்தனையோ முறை கைதாகி விட்டார்..
கஞ்சா விற்பனை: ஒவ்வொருமுறையும், டூர் போவது போல ஜெயிலுக்கு போய், வெளியே வந்துவிடுவார். மறுபடியும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவார்.. மறுபடியும் போலீசார் இவரை பிடித்து உள்ளே வைக்கும்..
கடந்த மாதம்கூட, புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்திருக்கிறார்.. இதுகுறித்து, அண்ணாநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுமே, உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார்.. கைநிறைய கஞ்சா பொட்டலங்களுடன் வேலழகி பிஸியாகி, கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.. அப்போது, கையும் களவுமாக அவரை போலீசார் கைது செய்தனர். 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்..
சிறைப்பறவை: வழக்கம்போல், ஜெயிலிலிருந்து வெளியே வந்து மறுபடியும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவார் என்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, அண்ணாநகர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மனோகர், சென்னை ஆணையருக்கு பரிந்துரை செய்தார்... அவரது உத்தரவின் பேரிலேயே வேலழகி மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இப்போதைக்கு இந்த "சிறைப்பறவை" புழலில் உள்ளது..!!












Click it and Unblock the Notifications