இருமுடி, தைப்பூசத் திருவிழா! மேல்மருவத்தூர் போற பிளானா.. சென்னை ரயில்வேயின் முக்கிய செய்தி!
சென்னை: இருமுடி, தைப்பூச திருவிழாவையொட்டி மேல்மருவத்தூரில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என சென்னை ரயில்வே அறிவித்துள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் தை மாதம் இருமுடி கட்டும் விழா நடைபெறும். இதற்காக லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு இருமுடியுடன் ஆதிபராசக்தியை தரிசிக்க செல்வர்.

அது போல் தைப்பூசத்திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவின் போதும் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு அம்பாளை தரிசிக்க வருவர். இதற்காக பக்தர்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக சென்னை ரயில்வே சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை (12653), மதுரை பாண்டியன் (12637), செங்கோட்டை பொதிகை (12661), மன்னார்குடி மன்னை (16179), கொல்லம் விரைவு ரயில் ( 16101), தஞ்சாவூர் உழவன் (16865), சேலம் விரைவு ரயில் (22153), மதுரை வைகை (12635) மற்றும் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் அந்த்யோதயா (20691) ஆகிய 9 விரைவு ரயில்களும் டிசம்பர் 1 முதல் ஜனவரி 25 வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக 2 நிமிடம் நின்று செல்லும்.
இவற்றில் சென்னை எழும்பூர்- சேலம் விரைவு ரயிலை தவிர, மற்ற ரயில்கள் இருமார்க்கமாகவும் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இதுதவிர வெளிமாநிலங்களில் இருந்து இயக்கப்படும் வேறு சில விரைவு ரயில்களும் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். இந்த தகவல் சென்னை ரயில்வேகோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications