சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில் வருகிறது பிரம்மாண்டம்.. கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டுக்கு குட்நியூஸ்
சென்னை: சென்னையில் ரயில்வேக்கு ஏராளமான காலியிடங்கள் உள்ளன. அப்படியான இடங்களை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறது. சென்னை ரயில்வே கோட்டம் தனது முதல் பிரத்யேக விளையாட்டு வளாகத்தை வேளச்சேரி ரயில் நிலையத்தில் தொடங்க இருக்கிறது. இது இந்த மாதமே செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வேளச்சேரி போல், தரமணி, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, செங்கல்பட்டிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் விளையாட்டு அரங்கங்கள் எல்லாம் மணி கணக்கில் பணம் வசூலிக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை சாமானிய மக்களால் கொடுக்கவே முடியாது. வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, தி நகர், கிண்டி என மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சென்னை மாநகர பகுதிகளில் விளையாட்டு அரங்கங்கள் எல்லாம் கட்டண அரங்கங்கள் ஆகும். அதற்கு கட்டணமும் மிக அதிகம்.

அரசுக்கு போதிய இடங்கள் இல்லாத இந்த பகுதிகளில் ரயில்வேக்கு மட்டும் கணிசமான இடங்கள் உள்ளள. குறிப்பாக வேளச்சேரியில் நிறைய இடங்கள் உள்ளன. அந்த இடத்தினை மக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.இதன் மூலம் நல்ல வருவாய் ரயில்வே ஈட்ட முடியும் என்றும் கோரிக்கை எழுந்தது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை கோட்ட ரயில்வே, தனது முதல் பிரத்யேக விளையாட்டு வளாகத்தை வேளச்சேரி ரயில் நிலையத்தில் தொடங்க இருக்கிறது.
இந்த விளையாட்டு மைதானங்கள் இன்டோர் மற்றும் அவுட்டோர் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. பல்வேறு வகையான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சுமார் 1,800 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள வெளிப்புற விளையாட்டுப் பகுதியில் கால்பந்து, வாலிபால் மற்றும் கிரிக்கெட் நெட்டுகள் ஆகியவற்றுக்கு இடமளிக்கப்படும். 520 சதுர மீட்டர் பரப்பளவிலான இன்டோர் கிரவுண்டில் கூடைப்பந்து மற்றும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டான பிக்கிள்பால் ஆகியவை இடம்பெறும் என்று கூறப்படுகிது.
இது தொடர்பாக பிரபல ஆங்கில செய்தித்தாள் நிறுவனமான டிடி நெக்ஸ் இடம் பேசிய சென்னை கோட்டத்தின் வர்த்தகத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், வெளிப்புறப் பகுதிக்கான தரைத்தள பணிகள் முடிந்துவிட்டது. இது ஒரு ஆரம்பம்தான். கும்மிடிப்பூண்டியில் இதேபோன்ற வசதியை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு மற்றும் தரமணி போன்ற நிலையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ரயில்வேயை பொறுத்தவரை ரயில்வேக்கு கட்டணமில்லா வருவாயை அதிகரிக்க சிறப்பான நடவடிக்கையாகும். இந்த வசதி மூலம் ஆண்டுக்கு ரூ.12 முதல் ரூ.14 லட்சம் வரை வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வசதிகள் ஒரு தனியார் ஒப்பந்ததாரரால் நிர்வகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்வே நேரடியாக இதை கண்காணிக்காமல் டெண்டர் விட்டுதனியாருக்கு தர திட்டமிடடுள்ளது. இப்படி பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஓரளவு நியாயமானதாகவும், மற்ற தனியார் விளையாட்டு மைதானங்களின் கட்டணத்தை விட குறைவாகவும் இருக்கும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்த நங்கநல்லூர் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து மன்றத்தின் செயலாளர் வி.ராமாராவ் பேசுகையில், "வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள்ள மிகப்பெரிய இடம் பல ஆண்டுகளாக தவறாகப் பயன்படுத்தப்பட்டது. பல நிலையங்களைப் போலல்லாமல், இந்த நிலையத்தில் ரயில்வேக்கு கட்டணமில்லா வருவாயை ஈட்டக்கூடிய மிகப்பெரிய இடமும் ஆற்றலும் இருக்கிறது. இப்போது, காலியாக உள்ள இடம் விளையாட்டு வசதிகளாக மாற்றப்படுவதால், அது மக்களுக்கும் பயனளிக்கும்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.சுரேஷ் பாபு கூறுகையில்,"இத்தகைய முயற்சிகள் சமூக தாக்கத்தையும். கும்மிடிப்பூண்டி போன்ற தொழில் மையங்களில், முறையான விளையாட்டு மைதானங்கள் மிகவும் அரிதாக உள்ளன. இந்த முயற்சி உள்ளூர் தொழிலாளர்களுக்கும் அருகிலுள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு மிகவும் தேவையானது" என்று தெரிவித்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications