அத்தை வீட்டிற்கு.. கொட்டும் மழையில் நடந்து சென்ற 10 வயது சிறுமி.. மின்சாரம் தாக்கி பலி.. சென்னையில்!
சென்னை அருகே 10 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
சென்னை: கொட்டும் மழையில் நனைந்து கொண்டே சாலையில் சென்ற சிறுமி, திடீரென மின்சாரம் தாக்கியும், தூக்கியும் வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை சென்னைவாசிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஒரு வார காலமாகவே சென்னை தத்தளித்து வருகிறது.. பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன..நேற்று பிற்பகல் வரை பலத்த மழை கொட்டி கொண்டிருந்தது.. ஆனால் காற்றின் வேகம் அதிகமாகவே தென்பட்டது..
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்துவிட்டது.. புயல் கரையை கடக்கும்நேரம் எப்படியும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.. ஆனால், சென்னை அருகே தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கினாலும், மழை எதுவும் இல்லாமலேயே கரையை கடந்தது..

அடுத்த புயல்
இது ஓரளவு நிம்மதியை சென்னை மக்களுக்கு ஏற்படுத்தியது.. ஆனால், இன்னொரு புயல் வரப்போகிறதாம்.. அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி 13ம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. எனவே, இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே பெய்த மழை காரணமாக மீட்பு பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், சென்னை மக்களின் சோகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தம்பதி
இப்படிப்பட்ட சூழலில், ஒரு சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. சென்னை, திருவொற்றியூர், கலைஞர் நகர் மெயின் தெருவைச் சேர்ந்த சிட்டிபாபு - அம்பிகா தம்பதியினர்.. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்றிரவு மழை காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது... வீட்டில் கரண்ட் இல்லாதால், கலைஞர் நகர், 10 வது தெருவில் வசிக்கும் தனது சகோதரி வீட்டிற்கு, 2 மகள்களையும் சிட்டிபாபு அனுப்பி வைத்தார்.. அத்தை வீட்டில் கரண்ட் இருப்பாக தெரியவும், 2 சிறுமிகளும் கிளம்பி சென்றனர்.

சிறுமிகள்
அப்போது மழை கொட்டிக் கொண்டிருந்தது.. தெருவெல்லாம் தண்ணீர் தேங்கி கொண்டிருந்தது.. எப்படியாவது அத்தை வீட்டிற்கு சென்றுவிடலாம் என்று நினைத்து 2 சிறுமிகளும் வேகமாக நடந்து சென்றனர்.. அப்போது, 2 வது மகள் கமலி, மழைநீரில் நடந்து சென்ற போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார். அதாவது சாலையில் இருந்த மின்சாரம், திடீரென தண்ணீருக்குள் பாய்ந்துவிட்டது.. இதில் காலை வைக்கும்போதுதான் கமலி தூக்கி வீசப்பட்டார்..

சிகிச்சை
கமலிக்கு 10 வயதாகிறது.. மயங்கிய கிடந்த சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.. ஆனால் டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கமலி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.. இதையடுத்து, கமலியின் சடலம்,பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications