Chennai rain: டிசம்பர் சவால்.. சென்னை மாநகராட்சி எடுத்த முக்கிய முடிவு! அடேங்கப்பா இதை யாரும் எதிர்பார்க்கலையே!
சென்னை: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிட்டால், சென்னை மக்கள் வெள்ளத்திற்காக தயாராகி விடுகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு வெள்ளம் தேங்காமல் இருக்க மாநகராட்சி முக்கிய முடிவை எடுத்திருக்கிறது.
அதாவது வடகிழக்கு பருவமழையின்போது (அக்டோபர்-டிசம்பர்) வெள்ளத்தை சமாளிக்கும் விதமாக, பல்வேறு மண்டலங்களில் 106 டீசல் மூலம் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பதற்கு சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

வாடகை மோட்டார்கள்
இந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் நிமிடத்திற்கு 6000 லிட்டர் வரை வெளியேற்றும் திறன் கொண்டவை, மேலும் அவை 80-100 ஹெச்.பி திறன் கொண்டவை. இந்த 106 நீர் இறைக்கும் இயந்திரங்களுக்காக மூன்று மாதங்களுக்கு வரி உட்பட ₹9,15,13,866 செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் மண்டலம் I முதல் VII வரையிலும், மண்டலம் XI முதல் XIII வரையிலும் பயன்படுத்தப்படும். தற்போது பயன்பாட்டில் உள்ள 5 ஹெச்.பி முதல் 50 ஹெச்.பி வரையிலான குறைந்த திறன் கொண்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் எதிர்பார்க்கப்படும் வெள்ளத்தை சமாளிக்க போதுமானதாக இல்லை என்று மாநகராட்சி கூறியுள்ளது.
சென்னை மக்களுக்கு நம்பிக்கை
மாநகராட்சி ஆவணங்களின்படி, புதிதாக வாடகைக்கு எடுக்கப்படவுள்ள நீர் இறைக்கும் இயந்திரங்கள் அதிக உறிஞ்சும் திறன் மற்றும் இடமாற்றம் செய்யும் வசதி கொண்டவை. மேலும் பல இடங்களுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்த ஏதுவாக இருக்கும். இந்த இயந்திரங்களை வாங்குவது, பராமரிப்பது மற்றும் சேமித்து வைப்பது போன்ற செலவுகள் அதிக அளவில் இருக்கும் காரணத்தினால், வாடகைக்கு எடுப்பது சிறந்தது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. பருவமழைக்கு மாநகராட்சி முழு வேகத்தில் தயாராகி வருவது, சென்னை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பருவ மழையும் பாதிப்பும்
தமிழ்நாட்டுக்கு இரண்டு பருவங்கள் மழையை கொண்டு வருகிறது. ஒன்று தென்மேற்கு பருவமழை. இரண்டாவது வடகிழக்கு பருவமழை. இதில், தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கி அப்படியே தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைப்பொழிவை கொடுக்கிறது. இது செப்டம்பர் மாதம் முடிவடைகிறது.
வடகிழக்கு பருவ மழையும் சென்னையும்
மறுபுறம் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதுதான் ரொம்ப டேஞ்சரானது. சென்னை முதல் தூத்துக்குடி வரை வட கடலோர மாவட்டங்களுக்கு அதிக மழையை கொடுப்பது இதுதான். ஜனவரி முதல் வாரத்தில் இந்த மழை முடிவடையும். ஆனால் இதன் உச்சம் டிசம்பர் மாதத்தில்தான் இருக்கும்.
சென்னையில் பெய்த மழையின் அளவு
2018 டிசம்பர்: சுமார் 49.30 மி.மீ
2019 டிசம்பர்: சுமார் 110.29 மி.மீ
2020 டிசம்பர்: சுமார் 326.48 மி.மீ
2021 டிசம்பர்: சுமார் 43.30 மி.மீ
2022 டிசம்பர்: சுமார் 234.40 மி.மீ
2023 டிசம்பர்: சுமார் 560.40 மி.மீ(அதிகபட்சமாக ஆவடியில் மழை பதிவு)
2024 டிசம்பர்: சுமார் 590 மி.மீ
மாநகராட்சி முடிவு
இதுதான் கடந்த 7 ஆண்டுகளாக சென்னையில் பதிவான மழையின் அளவு. ஒரு சில ஆண்டுகளில் மழை இயல்பான அளவில் இருந்தாலும் மற்ற ஆண்டுகளில் மழையின் அளவு அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில் மழைநீர் தேங்கும் பிரச்சனை சென்னை மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. திருவொற்றியூர் தொடங்கி திருநின்றவூர் வரைக்கும், தாம்பரம் வரையிலும் மழை நீர் தேங்கும் பிரச்சனை இருக்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது அதிக திறன் கொண்ட மோட்டார்களை பயன்படுத்துவது வெள்ள பாதிப்பை கணிசமான அளவில் குறைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications