மொட்டை மாடிக்கு போன புஷ்பா.. பின்னாடியே வந்த டெய்லர்.. சென்னை ராமாபுரத்தில் இப்படி? பாவம் அந்த மகள்
சென்னை: சமூகத்தில் பாலியல் குற்றங்களும் வன்முறைச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கும் விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது... இத்தகைய கொடூரமான செயல்களைத் தடுத்து நிறுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்... நேற்றுகூட சென்னை ராமாபுரத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது பாருங்க...
சென்னை ராமாபுரம், செந்தமிழ் நகர் அனெக்ஸ் 2-வது தெருவில் வசித்து வருபவர் புஷ்பா.. 37 வயதாகிறது.. கடந்த சில வருடங்களாகவே தனது கணவருடன் புஷ்பாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.. இதன்காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக அவரைப் பிரிந்து வசித்து வந்துள்ளார்.

சென்னை ராமாபுரம்
புஷ்பாவுக்கு 16 வயது மகள் உள்ளார்.. எனவே மகள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து அந்த வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், புஷ்பாவிற்கும் மதுரவாயல் ஸ்ரீதேவி குப்பத்தைச் சேர்ந்த டெய்லர் கார்த்திக் என்ற 34 வயது நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரும் புஷ்பாவிற்கு உறவினர் முறைதான்.
இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியிருக்கிறது.. இதனால் கார்த்திக் அடிக்கடி புஷ்பாவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
அப்படித்தான் சம்பவம் நடந்த இரவு கார்த்திக் வழக்கம்போல புஷ்பாவின் வீட்டிற்கு வந்துள்ளார். இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று தனிமையில் பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
புஷ்பா மொட்டை மாடி
அப்போது அவர்களுக்கு இடையே ஏதோ ஒரு விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரிய தகராறாக மாறியுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கார்த்திக், புஷ்பாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் புஷ்பா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.. கொலையை செய்துவிட்டு கார்த்திக் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
மறுநாள் காலை புஷ்பாவின் மகள் மாடிக்கு சென்றுள்ளார்.. அப்போதுதான் தன்னுடைய அம்மா சடலமாகி கிடப்பதையும், முகம், கைகளில் பலத்த காயங்களுடன் ரத்தம் வழிந்த நிலையில் கிடப்பதையும் க்ணடு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராமாபுரம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
புஷ்பா - விசாரணை
தகவலறிந்து வந்த போலீசார் புஷ்பாவின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புஷ்பா அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த உறவினர் கார்த்திக்கை தீவிரமாக தேட துவங்கினர்.. தேடி வந்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார்,ருஅவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழே இறங்கி வராத அம்மா
சம்பவம் நடந்த இரவு புஷ்பாவின் மகள் தன்னுடைய அம்மாவும், கார்த்திக்கும் பேசிக்கொண்டிருப்பதை இரவு 11 மணி அளவில் மாடிக்கு வந்து பார்த்தாராம்.. அதன் பிறகு மகள் கீழே இறங்கி வந்து தூங்கிவிட்டாராம்.. நீண்ட நேரம் ஆகியும் அம்மா மாடியில் இருந்து கீழே வராததால், காலையில் மாடிக்குச் சென்று பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை ராமாபுரம் பகுதியில் இந்த கொலை பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது... அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications