வாடகைக்கு வீடு.. சென்னையில் ஒரே அக்கப்போரு.. திடீர்னு வந்துநின்ற பூந்தமல்லி போலீஸ்.. அதென்ன சாக்லேட்
சென்னை: சென்னையில் சற்று ஓய்ந்திருந்த கஞ்சா புழக்கம், மீண்டும் தலைதூக்கியிருக்கிறது.. இதையடுத்து "ஆபரேஷன் கஞ்சா"வில் மீண்டும் இறங்கிவிட்டார்கள் நம்முடைய காவல்துறை.
சென்னை பூந்தமல்லியை அடுத்துள்ள நசரத்பேட்டை.. பூந்தமல்லியில் நிறைய கல்லூரிகள் செயல்பட்டு வருவதால், ஏராளமான மாணவ, மாணவிகள் இங்கேயே வீடு எடுத்து தங்கி படித்து வருகிறார்கள்.

நசரத்பேட்டை: குறிப்பாக, நசரத்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கிறார்கள்.. இவர்களை குறிவைத்து, கஞ்சா மற்றும் போதை ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக, நசரத்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, போலீசார், நசரத்பேட்டையை சுற்றி ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போதுதான் சந்தேகத்திற்கிடமாக சுற்றிவந்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
அவர்களை மடக்கி சோதனை செய்தபோது, அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை ஊசிகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.. ஒருவர் பெயர் சூர்யா, 29 வயதாகிறது.. செம்பரம்பாக்கத்தை சேர்ந்தவர்.. இன்னொருவர் பெயர் சந்தோஷ்.. 21 வயதாகிறது.. தூத்துக்குடியை சேர்ந்தவர்.. இவர்களை தவிர, அமிர்தலிங்கம், சூர்யா, 18 வயதுடைய நபர், மற்றும் 2 பேர் சிக்கினார்கள்.
மாணவர்கள்: கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் பகுதியிலேயே, இவர்கள் 7 பேருமே, வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார்கள்.. மாணவர்களுக்கு கஞ்சா, போதை ஊசிகளையும் அதிகமாகவே விற்பனை செய்து வந்திருக்கிறார்கள்..
இதில் கொடுமை என்னவென்றால், கஞ்சா புகைக்க இடம் இல்லாத மாணவர்களை, தங்களது வீட்டுக்கே அழைத்து வந்து தங்க வைத்து, கஞ்சாவையும் புகைக்க வைத்திருக்கிறார்கள்.. இதைத்தவிர, கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட்களை அதிகமாக விற்பனை செய்து வந்திருப்பதும் தெரியவந்தது.. இப்போதைக்கு இவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணை: அதுமட்டுமல்ல, இந்த 7 பேருமே கல்லூரி மாணவர்கள்தானாம்.. ஆனால், படிப்பு சரியாக வரவில்லையாம்.. அதனால், பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்கள்.. தங்களிடம் படித்த நண்பர்கள் என்பதால், கஞ்சாவை சப்ளை செய்வதும் இவர்களுக்கு எளிதாக இருந்திருக்கிறது.
எனினும், கஞ்சா சாக்லேட்டுகளை 7 பேரும் எங்கிருந்து வாங்குகிறார்கள்? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். நசரத்பேட்டையில், வாடகைக்கு வீடு எடுத்து தங்குபவர்களில் சந்தேகத்துக்கு இடமானவர்களையும் போலீசார் கண்காணிக்க துவங்கியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications