"3 மாசம் தான் டைம்!" நாய்களை வளர்ப்போர் உடனே ரெஜிஸ்டர் பண்ணுங்க, இல்லைனா! ராதாகிருஷ்ணன் பரபர உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் குறிப்பாகச் சென்னையில் நாய்கள் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகி உள்ள நிலையில், இது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், வீடுகளில் நாய் வளர்ப்போரும் உடனடியாக செய்ய வேண்டியவை குறித்தும் அவர் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சென்னையில் இப்போது நாய்கள் பிரச்சினை மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது.. தெருவில் சாதாரணமாக நடந்து செல்லும் நபர்களையே கூட நாய்கள் துரத்தித் துரத்திக் கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

தெரு நாய்கள் மட்டுமின்றி செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் பல நாய்களை இதன் உரிமையாளர்கள் முறையாகக் கண்காணிக்கத் தவறுவதால் இதுவும் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது.
நாய்கள் பிரச்சினை: இதற்கிடையே நாய்கள் பிரச்சினையைக் கையாள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தெரு நாய்கள் கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி முகாம் சென்னை ரிப்பன் கட்டிடத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது. இதில் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்ட நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இதில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தெரு நாய்களைக் கணக்கெடுக்கும் பணிகள் வரும் 10ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கு முன்பு சென்னையில் 2018இல் தெரு நாய்களைக் கணக்கெடுக்கும் பணி நடந்தது. இப்போது சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணக்கெடுப்பும் பணி நடக்கிறது. நாய்கள் ஆணா பெண்ணா தடுப்பூசி போட்டுள்ளதா எனப் பல விஷயங்கள் இதில் கண்டறியப்படும். இந்த சர்வேயில் கால்நடை மருத்துவர்கள் மட்டுமின்றி கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் கலந்து ஈடுபட உள்ளனர்.
கருத்தடை ஆப்ரேஷன்: சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த 6 மாதங்களில் சுமார் 10,100 நாய்களைப் பிடித்து அதில் 7,165 நாய்களுக்குக் கருத்தடை ஆப்ரேஷன் செய்துள்ளோம். கடந்த 7, 8 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நாய்களுக்குக் கருத்தடை ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அதேபோல சாலையில் சுற்றித்திரிந்த 1150 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் படப்பை பெட் வளர்ப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
3 மாதங்கள் தான் டைம்: அதேபோல வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் கட்டாயம் லைசன்ஸ் வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த மூன்று மாதங்களுக்குள் செல்ல பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசன்ஸ் பெற வேண்டும். 100 நாய்களில் 5, 6 நாய்கள் அதிக வெறி தன்மை கொண்டதாக இருக்கிறது. வெறிநாய்களைப் பிடித்தாலும் உச்சநீதிமன்ற அறிவுரைப்படி அவற்றை மீண்டும் அதே இடத்தில் விடுவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளால் மக்களுக்குப் பிரச்சினை இருப்பது உண்மை தான். ஆனால், நாய்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுத்தாலும் விலங்கு நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாய்களால் மக்கள் தினசரி எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் கால்நடை துறையினர் உடன் அடுத்த 10 நாட்களில் கூட்டம் நடத்தப்படும்" என்றார்.
சென்னை மழை: தொடர்ந்து பேசிய அவர், "உலகளவில் பல்வேறு நகர்ப்புறங்களில் குறுகிய நேரத்தில் அதீத மழை கொட்டி தீர்ப்பது தொடர்கதையாகி உள்ளது. சமீபத்தில் மும்பை நகரில் கூட அதீத மழை கொட்டியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரைக் கடந்த ஜூன் மாதம் சோழிங்கநல்லூரில் ஒரே நாளில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை கொட்டியுள்ளது. வடசென்னையில் ஓரிரு மணி நேரத்தில் 9 செமீ மழை கொட்டிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. இதுவரை சென்னையில் மழையால் சுரங்கப் பாதையில் பிரச்சினை இல்லை. கொசஸ்தலை ஆறு, கூவம், அடையாறு மூலம் மழை நீர் வெளியேறி வருகிறது" என்றார்.
மேலும், மூளையை உண்ணும் அமீபா குறித்து தேவையற்ற பதற்றம் இருக்கக் கூடாது என்ற அவர், இது ஒரு சுகாதார பிரச்சனை இல்லை என்றும் நீச்சல் குளத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம் என்றும் தெரிவித்தார். கேரளாவில் இந்த மூளை உண்ணும் அமீபாவால் 2 மாதங்களில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை என்றும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications