சென்னையில் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி கொலை.. வில்லிவாக்கத்தில் பயங்கரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பட்டப்பகலில் ரவுடி ஒருவரை ஓட ஓட விரட்டிய கும்பல், படுகொலை செய்ததால் அங்கிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சென்னை வில்லிவாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் ரவுடி சரத்குமார் (28). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் வில்லிவாக்கம் மேம்பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சரத்குமார் சென்று கொண்டிருந்தார்.

Chennai rowdy murdered by some miscreants and 6 surrendered to police

அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் சரத்குமாரை வழி மறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரத்குமார், தனது பைக்கை போட்டுவிட்டு தப்பியோடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் அரிவாளுடன் விரட்டியது.

இதையடுத்து சரத்குமார் மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்ததும், அவரை அந்த கும்பல் சுற்றி வளைத்தது. பிறகு சரத்குமார் தப்ப முயன்றும் முடியவில்லை. இதையடுத்து அந்த கும்பல் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு சரத்குமாரின் முகம், தலை, மார்பு, வயிறு பகுதிகளில் சரமாரியாக வெட்டியது.

இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சரத்குமார் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர். உடனே இந்த சம்பவம் குறித்து ராஜமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சரத்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த 2019-ஆம் ஆண்டு பெரவள்ளூர் பகுதியில் பூசாரி ஜானகிராமன் கொலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் சரத்குமார் முக்கிய குற்றவாளி என்பதால் முன்விரோதம் காரணமாக அவரை ஜானகி ராமனின் ஆதரவாளர்கள் கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் ராஜமங்கலம் போலீஸில் சரணடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+